தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரம் இடைகால் கிராமம் அருகே துரைசாமிபுரத்தில் விவசாயக்களுக்கு தென்னையில் காண்டாமிருக வண்டு கடடுப்படுத்தும் முறை பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கடையநல்லூரில் தங்கி விவசாயி களின் விளை நிலங்களுக்கு நேரடியாக சென்று தங்களது தொழில்நுட்பங்களையும் விவசாயிகளின் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த நோய் பூச்சி மேலாண்மை பற்றி விளக்கி கூறினார்கள்.
மேலும் ரினோலியூர் எனும் இனக்கவர்ச்சிப் பொறி வைப்பதன் மூலமாக காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை மாணவிகள் திம்மி, ரேஸ்மாருஷிதா, விஜிதா, கிருத்திகா ஶ்ரீ, சாலினி, ஆகியோர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் குழு ஆலோசகர் ‌ டாக்டர். செல்வராணி மற்றும் பாட‌ ஆசிரியர் டாக்டர். எஸ். விஜயகுமார் அறிவுரையின்படி செயல்முறை விளக்கம் அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *