ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் அருகே அரசு நிலத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த முப்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் என்பவரும் அதே பகுதியைச் சார்ந்த இளங்கோ ஆகியோர் கூட்டாக ஆக்கிரமிப்பு செய்ததாக அரசு உடனடியாக. மீட்டுத் தர வலியுறுத்தி கிராம மக்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுகவைச் சார்ந்த தற்போதைய நகர மன்ற உறுப்பினர் அதே பகுதியைச் சார்ந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள் பங்கேற்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் தியாகராஜர் கோயில் ராஜன் கட்டளைக்கு சொந்தமான நஞ்சை நிலம் குத்தகை பத்திரம் போடப்பட்டு கடந்த 1953ம் ஆண்டு முதல் சாகுபடி செய்யபட்டு வந்தது.

கடந்த 1969ம் ஆண்டு அரசு கல்லூரி கட்டுவதற்காக அந்த இடத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பட்டா நிலங்கள் குறித்து கோர்ட் தீர்ப்பும் உள்ளது. இந்நிலையில் அரசு பதிவேட்டில் ஒரு தரப்பிற்கு சாதகமாக திருத்தம் செய்யப்பட்டுள்ளததோடு தனிநபர்களுக்கும் அரசு நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கல்லூரிக்கு போக மீதமுள்ள நிலத்தை அரசு கட்டங்கள் கட்ட பயன்படுத்திக்கொள்ளலாம் என அனைத்து கிராம சங்கங்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட நிலம் தற்போது 30-வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் மற்றும் நாகை நெடுஞ்சாலையில் வசிக்கும் கணேசன் மகன் இளங்கோவன் என்பவரும் ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி
கிராம சமுதாய நலச்சங்க தலைவர் அருளானந்தம், கட்டட தொழிலாளர் சங்க தலைவர் தங்கையன், சுமை தூக்குவோர் சங்க தலைவர் அய்யப்பன்,  வர்த்தகர் சங்க தலைவர் சிவானந்தம் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *