மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

ஆற்றில் கருப்புக் கொடி ஏந்தி விவசாயி போராட்டம்

கூத்தாநல்லூர் அருகே நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செந்தில்குமார் என்ற விவசாயி அரை நிர்வாணத்துடன் சக விவசாயிகளுடன் இணைந்து ஆற்றில் கருப்புக் கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சேகரை கிராமத்தில் பல ஆண்டுகாலமாக நூற்றுக்கணக்கான ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் இச்சமூகத்தினர் பல ஆண்டுகாலமாக வீட்டுமனை பட்டா கேட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வரும் போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இருப்பிடம் இன்றி குழந்தைகள், முதியோர்கள், கன்னிப்பெண்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு அவதியுற்று வருகின்றனர்.

குறிப்பாக அரசால் ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ஆதிதிராவிட மக்களை சென்றடையாத நிலைக்கு காரணமாக அரசு அதிகாரிகள் இருந்து வருகின்றனர். மேலும் சேகரை கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துவரும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதால் விவசாய பணிக்கு தண்ணீர் கிடைக்க வழியின்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது.

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறியதால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து விளைநிலங்களுக்கு தங்கு தடையின்றி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டியும். சேகரை கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாயியுமான செந்தில் என்பவர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகாலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகி வரும் குறுவை நெற் பயிர்களை பாதுகாக்க ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், ஆதிதிராவிட மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூத்தாநல்லூர் அருகே உள்ள வெண்ணாற்றில் செந்தில்குமார் என்ற விவசாயி அரை நிர்வாணத்துடன் சக விவசாயிகளுடன் இணைந்து ஆற்றில் கருப்புக் கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிடம் குறைகளை கேட்காமல் தவறு முழுவதும் உங்களிடம் உள்ளது அரசு என்ன பன்னும் என விவசாயியை பார்க்காமல் செல்போனை பார்த்துக்கொண்டு பின்னர் அலுவலகத்திற்கு திரும்பிச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *