ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் நடைபெற்ற ஒணம் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..

மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் உள்ளனர்.இந்நிலையில் கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஜே.கே.ஓட்டலில் ஓணம் விழா நடைபெற்றது..

பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில் ஒவ்வொரு உணவு திருவிழாக்கள் நடப்பதை போல ஓணம் பண்டிகைக்கு நடைபெற்ற ஒரு நாள் திருவிழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது…

ஓணம் விழாவில் முக்கியமான ஸத்யா எனும் ஓண விருந்தை தற்போது அனைவரது வீடுகளிலும் அனைத்து வகைகளையும் தயார் செய்வது கடினம்..இந்நிலையில் கோவை ஜே.கே. ஓட்டலில் ,அதன் தலைவர் ஜெயராஜ் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரபு ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் ஓணம் விழா நடைபெற்றது.

இதில் மலையாள மக்கள் வீடுகளில் பூக்கோலம் போட்டு,, விளக்கேற்றி வழிபடுவது போன்ற பாரம்பரிய முறைப்படி உணவு திருவிழா நடைபெற்றது.இதில், 25 வகையான உணவு வகைகள் வாழை இலையில் வைத்து பரிமாறப்பட்டது…இந்த சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசிபழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி,நேந்திரன் மற்றும் பலாப்பழம் சிப்ஸ்,துவரன்,பப்படம், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம்,அடை பிரதமன்,பாயாசம் உள்பட 25 வகைகள் இடம் பெற்றிருந்தன..ஓணம் பண்டிகையில் பாரம்பரிய விருந்து சாப்பிட தற்போது அதிக மக்கள் ஆர்வம் காட்டுவதால், இந்த பிரத்யேக உணவு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளதாக ஜே.கே.ஓட்டல் நிர்வாக மேலாளர் பாலாஜி மற்றும் பொது மேலாளர் சக்திவேல்,சமையல் கலை நிபுணர் சூஃபியான் ஆகியோர் தெரிவித்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *