திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கடலாடி அருகே சித்தூர் மாவட்டம் சவட்ட பள்ளி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் வாத்து ஏற்றி செல்லும் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார் இதற்கிடையில் கடந்த 07.05. 2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வாத்து லோடு ஏற்றி சென்று அதனை இறக்கி விட்டு செங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது கடலாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட போளூர் கடலாடி பைபாஸ் சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது லேசாக உரசி விபத்து ஏற்படுத்தி உள்ளார் ஹரிஷ்
இது சம்பந்தமாக அரசு பேருந்து ஓட்டுனரும் ஹரிசும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்போது பேருந்து சரி செய்ய ஆகும் செலவை ஹரிஷ் ஏற்க மறுத்ததால் பேருந்து ஓட்டுனர் கடலாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் ஹரிசை சோதனை செய்ததில் அவர் மது போதையில் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது இதனால் அவருக்கு மது போதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் ட்ரிங்க் அண்ட் டிரைவ் வழக்கு பதிவு செய்து பனிரெண்டாயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு பேருந்து
சரிசெய்ய ஆகும் செலவை கொடுத்துவிட்டு லாரியை எடுத்து செல் எனக் கூறி ஈச்சர் லாரி யை கடலாடி போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்
இதனை அறிந்த வேலூர் பகுதியைச் சேர்ந்த ஈச்சர் லாரி உரிமையாளர் ரமேஷ்
என்பவர் கடலாடி காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை விசாரித்து நாற்பதாயிரம் ரூபாய் வரை காவல் நிலையத்தில் செலவு செய்து காவல் நிலையத்தில் இருந்த ஹரிசை விசாரணைக்கு அழைக்கும் போது மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதாக கூறி பணியில் இருந்த காவலரிடம் தெரிவித்துவிட்டு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது
மீண்டும் 9/5/2024 அன்று காவல் நிலையத்திற்கு சென்ற ரமேஷ் தனது வாகனத்தை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்து உள்ளார் அப்போது காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஓட்டுநர் ஹரிஷ் எங்கே என்று கேட்டுள்ளனர் அப்போது காவலரிடம் தெரிவித்த ரமேஷ் ஹரிஷ் பயந்து கொண்டு எங்கேயோ ஓடிவிட்டார் என தெரிவித்துள்ளார்
இதனை பெரிதும் பொருட்படுத்திக் கொள்ளாத போலீசார் வண்டியின் மீது வழக்கு போட்டிருப்பதாகவும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும்போது நீங்கள் வந்தால் போதும் என ரமேஷை அனுப்பி வைத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த ரமேஷின் மகன் மேகநாதன் மற்றும் அவரது உறவினர் விஜயகுமார் ஆகியோர் ஹரிசை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று அவர்கள் வாத்து மேய்த்து வரும் செங்கம் அடுத்த கொட்டகுளம் ஏரியில் வைத்து கை மற்றும் கால்களை கட்டி போட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது அப்போது மேகநாதன் தன் தந்தை ரமேஷ்க்கு செல்போனில் வாட்சப் மூலம் வீடியோ கால் செய்து உள்ளார் அப்போது ஹரிசை எப்படி எல்லாம் அடித்து கொடுமைப்படுத்த வேண்டும் என ரமேஷ் கூற அதே போன்று மேகநாதனும் அவரது உறவினருமான விஜயகுமார் தாக்கும் காட்சிகளை மேகநாதன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்
அதன் பிறகு விடியற்காலை 3 மணி அளவில் ஹரிஸை கட்டி வைத்து அடித்ததை பார்க்க சென்றபோது
தாக்கப்பட்ட ஹரிஸ் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் வாத்துகளுக்கு எடுத்துச் செல்லும் தீவன பையாள் மூட்டை கட்டி செங்கம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள செய்யாற்றுப்படுகையில்குழி தோண்டி புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது
மறுநாள் காலையில் குடியாத்தத்தில் உள்ள மேகநாதனின் நண்பரான வினோத் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நானும் விஜயகுமாரும் சேர்ந்து ஹரிசை அடித்து சித்திரவதை செய்ததாக தெரிவித்துள்ளார் இதனை வினோத் நம்ம மறுத்ததாக கூறப்படுகிறது
இதனை நிரூபிக்கும் விதமாக மேகநாதன் வினோத் செல்போன் எண்ணிற்கு தான் எடுத்து வைத்த அனைத்து வீடியோக்களையும் அனுப்பி வைத்துள்ளார் இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த வினோத் நண்பர் மற்றும் ஹரிசிக்கு நெருக்கமானவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார்
இந்த வீடியோ காட்சிகள் ஆந்திரா மாநிலம் சித்தூர் முழுவதும் வைரலாக பரவி வந்த நிலையில் மேகநாதனும் விஜயகுமாரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்
இது சம்பந்தமாக அடித்து கொலை செய்து புதைத்த இடம் செங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் இருவரையும் செங்கம் காவல்யத்தில் ஆஜர் படுத்த தூத்துக்குடி நீதிமன்றம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
அதன் அடிப்படையில் இன்று மாலை மேகநாதனும் விஜயகுமாரும் செங்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர் இருவரையும் கைது செய்து விசாரணை செய்த சங்கம் போலீசார் ஹரிஷ் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தனர் அதன் பிறகு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் புகார் பெற்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நாளை ஆர்டிஓ உத்தரவின் பேரில் ஹரசின் உடலை தோண்டி உடற்கூறு ஆய்வு செய்யப்படுவதாக போலீசார் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது