நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள – டிரினிடி மகளிர் கல்லூரி மாணவிகள் ஓணம் திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் அனைவரும் இன்று 29.08.2023 ஓணம் பண்டிகையினை பண்டிகை நாளான இன்று குதூகலமாகக் கொண்டாடினர்

சாதி, மதம், மொழி,இனம், ஏழை பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் திருவிழாவாகும் ஆகும்.

கேரளத்தை ஆண்ட மாவேலி மன்னன் தங்களின் நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்களா அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? வயிறார சாப்பிடுகிறார்களா? கஷ்டம் இல்லாமல் இருக்கிறார்களா ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்களா என்பதெல்லாம் ஆராய்ந்து பார்ப்பதற்காக கேரளத்தை ஆண்ட மாவேலி மன்னன் ஊர் உலா வருவது வழக்கம் அவ்வாறு வந்து நாட்டு மக்களை கண்டு மகிழ்ச்சி அடைந்து செல்வது வாடிக்கையாக வைத்திருந்தார்

அதை நினைவு கூறும் வகையில் காலம் காலமாக கேரள மாநிலத்தில் நடத்தப்படும் ஒரு விழாவாக தான் ஓணம் பண்டிகை திருவிழா வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது அந்த திருவிழா இன்று நடக்கும் மலையாள மக்களின் ஒரு முக்கியமான விழாவாக இருந்தாலும் அது தற்போது உலகம் முழுவதும் மலையாளம் பேசும் மக்கள் வாழுகின்ற காரணத்தால் அனைத்து இடங்களிலும் ஓணம் பண்டிகை ஓணம் தினமான இன்றும் முன்பும் கொண்டாடப்பட்டு வருகிறது

குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அதிகமாக இருப்பதால் இங்கு படிக்கின்ற கேரள மாநிலத்தின் மலையாள மாணவ மாணவிகள் அவர்களுக்காகவே இங்கு கல்லூரிகளில் கல்லூரி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது அந்த வகையில் நாமக்கல் டினிட்டி மகளிர் கல்லூரியிலும் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது

மாணவியர் அனைவரும் கல்லூரி வளாகம் முழுவதும் அத்தப்பூ கோலமிட்டும், பல்வேறு மலர்களால் தோரணங்கள் அமைத்தும் உற்சாகமாக ஓணம் பண்டிகையினை கொண்டாடினர்.

மாணவியர் மட்டுமன்றி பேராசிரியைகளும் கேரள மாநில பாரம்பரிய உடையான சந்தன நிறப் புடவை அணிந்து வந்தனர் அணிந்து வந்தனர் குறிப்பாக. தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் விதத்தில்மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது

கல்லூரியின் முதல்வர் லட்சுமி நாராயணன், உயர் கல்வி இயக்குனர் அரசு பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி பேராசிரியைகள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *