யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பதுபோல்”தமிழகஅரசு தற்போது அறிவித்த நெல்லுக்கு உண்டான ஆதாரவிலையுடன் ஊக்கத்தெகை

நாமக்கல்

தமிழக அரசு தற்போது அறிவித்த நெல்லுக்கு உண்டான ஆதார விலையுடன் ஊக்கத்தெகை தமிழக விவசாயிகளுக்கு “யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல்” தமிழக அரசு தமிழக விவசாயிகளுக்கு மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுசாமி அறிக்கை

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்

அதில் தமிழ்நாடு அரசு 28.08.2023 அன்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லிற்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கு 01.09.2023 முதல் புதிய ஆதார விலையுடன் ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்டது குறித்து தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அதில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டிப்பாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் 2023-2024 ஆம் ஆண்டிற்கு நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குணிடாலுக்கு ரூ.2,183/- எனவும் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,203/-ம் மத்தியரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

28.08.2023 அன்று தமிழ்நாடு அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகை சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.82/-ம் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.107/- ம் விலை உயர்த்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு
அறிவித்த விலைப்படி ஆக மொத்தம் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகையுடன் ரூ.2,265/-ம் சன்னரக நெல் குவிண்டலுக்கு தற்போது ஊக்கத்தொகையுடன் ரூ.2,310/- என்ற விலை 01.09.2023 முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு 28.08.2023 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு ஆதார விலை கூடுதலாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. அரசு இரண்டு ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பு ஏற்று, தற்போது மூன்றவாது ஆண்டு நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. என்று ஆர். வேலுசாமி குறிப்பிட்டுள்ளதோடு

கடந்த மூன்று ஆண்டு காலமாக நெல் உற்பத்தி செய்வதை ஒப்பிடும்போது வேலை ஆட்கள் கூலி அதிகபடியாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மற்றும் உரம் மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகவிவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை
ஒப்பிடும்போது தமிழக அரசு நெல்லுக்கான ஆதார விலையுடன் ஊக்கத்தொகை மிக குறைவாக உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது அறிவித்த நெல்லுக்கு உண்டான ஆதார விலையுடன் ஊக்கத்தெகை தமிழக விவசாயிகளுக்கு “யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல்” தமிழக அரசு தமிழக விவசாயிகளுக்கு மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

என்பதை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *