கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில்
தர்மபுரம் ஆதீன கட்டுபாட்டில் உள்ள. கோசாலை மாட்டு கழிவுகளை பட்டிட்டல் சமூக மக்கள் வசிக்கும் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தாக குற்றம் சாட்டி வட்டாட்சியர் , காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையை மதிக்காமல் மீறி செயல்பட்டு வரும் தருமபுர ஆதீனத்தை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் நீலப் புலிகள் இயக்கம் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்……

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஜலந்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட தர்மபுர ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பனந்தாள் வடக்கு தெருவில் கோசாலை என்கிற பெயரில் 600 க்கு மேற்பட்ட மாடுகளை கட்டி அதன் கழிவுகளை பட்டியல் சமூக மக்கள் வசிக்கின்ற பகுதியில் சுகாதாரம் இன்றி கொசுக்கள் ஈக்கள் உள்ளிட்ட நோய் தொற்று பரவும் கிருமிகளை உற்பத்தியாவதற்கு வசதியாகவும், பட்டியல் சமூக மக்களுடைய துப்புரவு தூய்மைக்கு வேட்டு வைக்கும் கோசாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்.
குந்துவதற்கு குடிசையின்றி இருக்கக்கூடிய இம்மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக கருதப்படுகிற வீட்டுமனை பட்டாவாக கிராம தெருவை ஒட்டி உள்ள நிலங்களை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து ஏற்கனவே வட்டாட்சியர் காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையை மதிக்காமல் மீறி செயல்பட்டு வரும் தருமபுர ஆதீனத்தை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திருப்பனந்தாள் கடை வீதியில் ஆர்ப்பாட்டம்என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்
கடைசி நேரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர மறுத்த காவல் துறையினர் மடம் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதை எதிர்த்தும் தடையை மீறியும் வெளுத்து வாங்கிய உச்சி வெயிலில் திருப்பனந்தாள் கடை வீதியில் தேரடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து மாறுதல் செய்யப்பட்டு காவல்துறையினரை குவித்து வைத்திருந்தனர்.

திட்டமிட்டபடி நீலப்புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் முனைவர் டி.எம். புரட்சிமணி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நான் கண்டன உரையாற்றினேண்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் புரட்சி கழகம் தலைவர் அரங்க.குணசேகரன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு, புதிய சமத்துவ கட்சி தலைவர் புதுக்கோட்டை சசிகுமார்,அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டம் தலைவர் அ.லூர்துசாமி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் க. செ.முல்லைவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.எல்.)மணலூர் கண்ணையன், தோழர் பனசை அரங்கன், உழவர் அரன் அருண் மாசிலாமணி, அனைத்து மக்கள் நீதி கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் தங்க.பாலகுரு, நீலிப்புழுகள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சம்சுதீன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

இதில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி முன்னணி பொறுப்பாளர்கள் அருப்பூர் ரா.அமானுல்லா,செள.குபேந்திரன் ,ஒன்றிய மு.செயலாளர் இளையபெருமாள், குடந்தை வடக்கு ஒன்றிய மு.செயலாளர் மு.முரளி, பறட்டை மு.கௌதமன், புதுத்தெரு நாகலிங்கம், பானுச்சந்தர், கலைச்செல்வன், பிரகாஷ் தோழர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு .கீர்த்திவாசன் அவர்கள் தலைமையில் காவல்துறையினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு வாரம் ஸ்டேட்டஸ் கோ மெயின்டனன்ஸ் அடிப்படையில் கோசாலை கட்டாமல் தடுத்து வைப்பது என்றும் பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் இந்த கால இடைவெளி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் பேச்சுவார்த்தை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முடித்துக் கொல்லப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *