விவசாய நிலத்தில் யானை வழித்தடம் இருப்பதாக வனத்துறை அறிக்கை வெளியிட்டது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கோவை ரேஸ்கோர்ஸ் ஜவான்ஸ் பவனில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வனத்துறை வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்
அப்போது பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறியதாவது.
தமிழக அரசின் மற்றும் வனத்துறையும் யானை வழித்தடங்களை கண்டறிந்து வலசைப் பாதை ஏற்படுத்த வேண்டும் என்று 161 பக்கங்களுக்கு ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டதை விவசாயிகளும் மற்றும் மலைவாழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் விளம்பரங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் எவ்வாறு ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிடலாம் அந்த அறிக்கை மலைவாழ் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்படி புரியும் என்று சுட்டிக் காண்பித்தார்.

மேலும் 2024 ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தமிழகத்தில் சுமார் 42 வழித்தடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை,காரமடை,போளுவம்பட்டி,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய வனசரக பகுதிகளுக்கு உட்பட்ட 520 ஏக்கர் மேல் உள்ள விவசாயி நிலங்களை யானை வழித்தடத்திற்காக கையகப்படுத்துவது ஒருதலை பட்சமாக வனத்துறையினர் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள 557 கிராமங்கள் உள்ளது.கோவை மாவட்டத்தில் 57 கிராமங்கள் யானை வழித்தடமாக வனத்துறையினர் அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் யானை வலசை பாதையில் ரயில்வே தண்டவாளம் இருப்பதால் சுமார் தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளது எனவும் வனப்பகுதியில் சொகுசு விடுதி, கல்வி நிறுவனம் போன்றவற்றை வனத்துறையினர்

அகற்றாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது முற்றிலும் தவறான செயல் என்று தெரிவித்தார்.
வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராமல் வனப்பகுதி உள்ளே பசுமை தீவனங்களும், நீரும் ஏற்படுத்து கொடுத்தால் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வராது என்று கூறினார்.

கேரளா மாநிலத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை ரப்பர் குண்டால் விரட்டுகிறார்கள். அதேபோல் தமிழகத்திலும் வனத் துறையினர் காட்டு பன்றிகளை விரட்ட ரப்பர் குண்டு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் சுற்றறிக்கையை ஐந்து நாட்களில் படித்துவிட்டு பதில் கூற வேண்டும் என்று வனத்துறை கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வனத்துறை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *