செய்தியாளர்.ச.முருகவேல்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாட்டில் அ திமுக பூத் கமிட்டி கூட்டம் நடந்தது கண்டமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்

மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் அற்புதவேல்,மோட்ச குளம் ஒன்றிய கவுன்சிலர் பாரத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நித்தியகல்யாணி ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வரதராஜன், சரவணன் முன்னிலை வகித்தனர்.

பூத் கமிட்டி கூட்டத்தில் கண்டமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் பேசும்போது வரும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றி கனி பறிக்க அனைவரும் முனைப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் கவிதாபாலாஜி, ஒன்றிய விவசாய அணி, ஒன்றிய பாசறை என அனைத்து பிரிவு செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். கண்டமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஆளுயர மாலை, மற்றும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

மோட்சகுளம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பாரத், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸுக்கு தனிப்பட்ட முறையில் பிறந்தநாள் வாழ்த்து கேக்வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *