கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடை அமைப்பு சார்பாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மலை கிராமத்தை சேர்ந்த தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சியம்மா உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது…

கேரள தமிழக எல்லையை ஒட்டியுள்ள கோவையில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர்.. கல்வி,மருத்துவம்,ரியல் எஸ்டேட்,என பல்வேறு துறைகளில் மலையாள மக்கள் உள்ள நிலையில் இவர்களின் படைப்பு திறனை வெளிபடுத்தவும் கேரளாவின் தனித்துவமான இசை , கலை , இலக்கியங்கள் போன்றவையை மீட்டெடுக்கும் விதமாக கோவையில் கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது..

இந்நிலையில் மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடும் விதமாகவும்,அதே நேரத்தில் மலையாள கலைகளான நாடன் பாட்டு,உள்ளிட்ட கலை தொடர்பானவர்களை ஊக்குவிக்கும் விதமாக இரண்டாவது ஆண்டாக மலையாள பண்பாட்டு மேடை அமைப்பின் நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.அரங்கத்தில் நடைபெற்றது..

அமைப்பின் தலைவர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,பாலக்காடு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முக்கிய நிகழ்வாக கலை துறையினரை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது.இதில் அட்டபாடி மலை கிராமத்தை சேர்ந்த தேசிய விருது பெற்ற நஞ்சியம்மா,கேரளாவில் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் பாடி வரும் பிரபல மாணவி தீர்த்தா சுபாஷ்,மற்றும் கேரளாவை பூர்விகமாக கொண்டு கோவையில் சாதித்து வரும் தொழிலதிபர்கள் நானு மற்றும் ஜே.எம்.ஜே.வில்சன் தாமஸ் ஆகியோருக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில்,ஓணம் பண்டிகை காலம் என்பதால் கலை , கலாச்சார நிகழ்ச்சி நடனம் , நாடன்பாட்டு,கதகளி, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

இதில் ஓணம் பண்டிகையின் முக்கிய விருந்தான ஓண சத்யா விருந்து பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,மலையாள திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை நிமிஷா உண்ணிகிருஷ்ணன் மற்றும் கோவையில் உள்ள மலையாள அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், பிரபாகரன் ராமகிருஷ்ணன் சோமன் மேத்யூ, ராமச்சந்திரன், ராஜகோபாலன், அசோக், ராஜ்குமார், ராதாகிருஷ்ணன் உட்பட மலையாள மொழி மக்கள் பலர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்….

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *