வலங்கைமான் அருகே உள்ளஆலங்குடியில் நடைபெற்ற சி பி ஐ கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில், வலங்கைமான் வேளாண்மை அலுவலகத்தில் உதவி இயக்குனர் பணி நியமனம் செய்ய வேண்டும், அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள் தலைமை வகித்தார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி.சின்ன ராஜா நடந்துள்ள பணிகள் குறித்தும், எதிர்கால கடமைகள் குறித்தும் விளக்கி பேசினார்.

காவிரி தண்ணீரை நம்பி சம்பா நடவு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவு செய்து நட்ட பயிர் தண்ணீரின்றி பயிர் எரிந்து, காய்ந்து உள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை சாகுபடி தண்ணீரின்றி, கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூபாய் 13,500 யை வலங்கைமான் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் ,2021- 22 பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அனைவருக்கும் முழுமையான பயிர் காப்பீடு வழங்க வேண்டும்,

வலங்கைமான் வேளாண்மை அலுவலகத்தில் உதவி இயக்குனர் பணி நியமனம் செய்ய வேண்டும், அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை
நிரப்புதல் வேண்டும், விவசாயிகள் சங்கம் 2023 ஆண்டுக்கான உறுப்பினர் பதிவு 2,500 பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் மாதம் 3-ம் தேதி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது, இப் போராட்டத்தை விளக்கி வரும் 23.10 .2023 அன்று மாபெரும் விளக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் விளக்கி பேசினார்.

இக்கூட்டத்தில் பங்கு கொண்ட ஒன்றிய துணைத் தலைவர் எம். ராஜேஷ் கண்ணா ஒன்றிய பொருளாளர் எஸ். பூசாந்திரம் சிறப்பு அழைப்பில் கலந்து கொண்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் ஏ. மருதையன், முடிவில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் எஸ். பூசாந்திரம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *