ஈரோடு பவானி பாஜக., தெற்கு மாவட்ட மண்டல செயற்குழு கூட்டம்
நேற்று நடந்தது. மண்டல பொது செயலாளர் லதா தலைமையில் நடந்த கூட்டத்தில், சமையல் கேஸிற்கு 200 ரூபாய் மானியம், மகளிர்க்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, சந்திராயன் திட்டத்தில், துணை திட்ட இயக்குனராக பணிபுரிந்த கல்பனா, துணை செயல்பாட்டு இயக்குனராக பணிபுரிந்த ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணை தலைவர் வித்யா, சுகன்யா, சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.