திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலவாசல் பகுதி நேர நூலகத்தில் நடமாடும் மாட்டு வண்டி நூலகம் துவங்கப்பட்டதில் 93 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 30 நாட்கள் நடைபெறும் மேல வாசல் வாசிக்கிறது

எனும் வாசிப்பு முகம் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வளமுடன் ஜீவா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள் இந்நிகழ்விற்கு மாவட்ட நூலக அலுவலர் க முருகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

ஊராட்சி மன்ற தலைவர் கு.திராவிட மணி மற்றும் ஜே சி மன்னை தலைவரும் தமிழ் ஆசிரியருமான ந. மாமலைவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். சிறப்பு விருந்தினராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் துறை தலைவர் முனைவர் இரா. காமராசு அவர்கள் பேசும்போது வாசிப்பு ஒரு மனிதனை எப்படி மாற்றும் என்பதற்கு வாழ்நாள் உதாரணங்கள் நிறைய இருக்கின்றன

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு புத்தக வாசிப்பு அவசியம் என்றார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் பல்கலைக்கழகத்தின் உதவி நூலகர் தி. சிவக்குமார் அவர்கள் வாசிப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய தோடு 30 நாள் வாசிப்புக்கான விபரம் அடங்கிய பதாதகைகளை வெளியிட்டு அவர் பேசும் பொழுது புத்தக வாசிப்புக்கான தாயகமாக அந்த காலத்திலேயே மேலவாசல் விளங்கி இருக்கிறது நடமாடும் மாட்டு வண்டி நூலக மூலம் அந்தக் காலத்திலேயே 90 ஊர்களுக்கு வாசிப்பை கொண்டு சென்று இருக்கிறார்கள்.

பெண்களால்தான் குழந்தைகளிடம் வாசிப்பைக் கொண்டு செல்ல முடியும் அதற்கான முன்னெடுப்பை பெண்கள் தான் மேற்கொள்ள வேண்டும் நூலகர்கள் அதற்கு உறுதுணையாக இருந்து பாடுபட வேண்டும் என்றும் கூறினார்கள். விழாவிற்கு ஆடிட்டர் அருண் காந்தி தன்னம்பிக்கை பயிற்சியாளர் எம் முகமது பைசல் மருத்துவர் எஸ் அசோக் குமார் ஜேசி ஐ மன்னார்குடி தலைவர் சுசீலா கிராம கமிட்டி தலைவர் கருணாநிதி வாசகர் வட்ட தலைவி சத்யா சதீஷ் வாசகர் வட்டத்தைச் சார்ந்த செல்லமுருகன், சூரியகலா சரவணன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தவமணி, பிரவீன், நூலகர்கள்
வ அன்பரசு, மா ஆசைத்தம்பி, கோ விஜய் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் நூலகர்கள் சு ராகவன் அர்ஜுனன் இந்திரா, சித்ராசெல்வி, கார்த்திகேயன், சுசிலா, உஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிறைவாக நூலகப் பொறுப்பாளர் லட்சுமணன் நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை வாசிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமாரும் மேலவாசல் கிராமவாசிகளும் செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *