நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வலையப்பட்டி என். புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய சுற்றுப்புற பகுதிகளில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வலியுறுத்தி 40 கட்ட ஆலோசனைக் கூட்டங்கள், 29 கட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றும், இதுவரை தமிழக அரசு இத்திட்டத்தை ரத்து செய்யவில்லை.

எனவே, உடனடியாக சிப்காட் திட்டத்தை ரத்துச் செய்ய வலியுறுத்தி வலையப்பட்டி மோகனூர் சாலையில் உள்ள சிப்காட் எதிர்ப்பு குழு அலுவலகத்தில் விசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் கே. பாலசுப்பிரமணியன், தலைமையில் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி விவசாய அணி தலைவர் ரவிச்சந்திரன், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் டாக்டர் பாஸ்கர், பா. ஜ. க. மாநில விவசாய அணி செயலாளர் ராதிகா மற்றும் விவசாய அமைப்புகள் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்

இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கட்சியினுடைய பிரதிகளும் , விவசாய சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து

அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களது விவசாய தோட்டங்களில் வரப்புகளில் முதல் தவணையாக 25,000 பனைவிதைகள் விதைக்கும் நிகழ்வை நடத்தி 30 வது போராட்டமாக இன்று நூதன முறையில் 1 கோடி பனை விதையை விதைக்கும் போராட்டத்தை துவக்கினர்

படிப்படியாக இன்னும் ஆறுமாத காலத்திற்குள் அப்பகுதியில் அனைத்து விவசாய நிலங்களின் சுற்றுக்கால்களிலும் 1000000 ( பத்து இலட்சம்) பனைவிதைகளும் விதைக்கவும்

ஒருவருட காலத்திற்குள் ஒருகோடி பனை விதைகள் நடவுசெய்து இந்த பகுதியில் சிப்காட்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பனைசாகுபடிக்கு முன்னோடியாக மாற்றிடவும், கின்னஸ் சாதனை நிகழ்த்திடவும் முடிவு செய்து இந்த நூதன போராட்டத்தை இன்று துவக்கினர் .

சிப்காட்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த 1 கோடி பனை விதைகள் நடவுசெய்து இந்த போராட்ட நிகழ்ச்சியை, 30 வது போராட்டமாகவும் இன்று நடத்தினர் இந்த போராட்டத்தில் சிப்காட் டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தோட்டங்களில் இறங்கி 1 கோடி பனை விதைகளை நடும் போராட்டதை துவக்கினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *