விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்குட்பட்ட அகூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் , துணைத் தலைவர் தமிழரசி, வார்டு உறுப்பினர்கள் கீதா ரமேஷ்,சதீஷ்குமார், ஜெய் துன் பி முன்னிலை வகித்தனர்.

இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 348 (2) ன் படி மாநில சட்டமன்ற தீர்மானம் மற்றும் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அந்த மாநிலத்தின் பெருவாரியான மக்கள் பேசும் மொழியில் உயர் நீதிமன்றத்திற்கு அலுவலக மொழியாக கொண்டு வரலாம் என்ற சட்ட வாய்ப்பு உள்ள போதும், கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தடுக்கப்பட்டு வருகிறது ஆனால் வடக்கே பல மாநிலங்களில் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. ஆகவே எளிய மக்களுக்கு புரியும் மொழியில் நீதி நடைமுறை இருக்க வேண்டும், “உயர் நீதிமன்றத்தில் ஆங்கிலத்துடன் தமிழ் ஆட்சி மொழியாக மாநில, ஒன்றிய அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவற்றிற்கு தேவையான நிதியினை ஒதுக்க வேண்டும்”, உட்பட 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *