மதுரையில் பஸ்களில் விதிமீறி அதிக ஒலியுடன் பொருத்தப்பட்ட 21 ‘ஏர்ஹாரன்கள்’ அகற்றம்….

மதுரையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அரசு மற்றும் தனியார் பஸ்களில் விதிமீறி பொருத்தப்பட்ட 21 ‘ஏர்ஹாரன்கள்’ பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அபராதமாக ரூ.2 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் வடக்கு. மத்திய, தெற்கு வட்டார போக் குவரத்து அலுவலகங்களின் சார்பில் அரசு மற்றும் தனி யார் பஸ்களில் அதிக ஒலி ‘எழுப்பக்கூடிய‘ஏர்ஹாரன்கள்’ குறித்த சிறப்பு வாகன தணிக்கை நடந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலர் (செயலாக்கம்) கார்த்திகேயன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, செல்வம், சம்பத்குமார், சுகந்தி, மனோகர், அனிதா ஆகியோர் அடங்கிய குழுவினர், அங்கு வந்த 70-க்கும் மேற்பட்ட பஸ்களில் சோதனை நடத்தினர்.

அப்போது. மதுரை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துணை அலுவலர் ஜெயசுதா தலைமையிலான அதிகாரி களும்கலந்து கொண்டு, அங்கு வந்த பஸ்களில் பொருத்தப்பட்ட ‘ஏர்ஹாரன்’களில் ஒலி எழுப்பி சோதனை நடத்தினர்.

அரசு நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவை விட அதிகமாக சத்தம் எழுப்பக்கூடிய ‘ஏர்ஹாரன்கள்’ பொருத்திய 21 பஸ்களில் இருந்த ஒலிப் பான்களை அதிகாரிகள் அகற் றினர். இதுபோல், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான் களை பொருத்திய வாகன உரிமையாளர்களிடம் இருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ‘ஏர்ஹாரன்கள்’ பொருத்தப் பட்டிருந்ததாக புகார்கள் எழுந்தது.
இதுபோல், முகப்பு விளக்குகளில் அதிக ஒளி தரும் மின்வி ளக்குகள் பொருத்தியது தொடர்பாகவும் ஆய்வு செய் யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *