வலங்கைமான் தாலுகாவில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்ப ஏற்படக்கூடிய வீராணம் ஊராட்சியில் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அமுதா நேரில் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், மழைக்காலத்தை எதிர்கொள்ளவும் ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் தயாரித்து வைத்திருக்க வேண்டும், மீட்புப் பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள்,மிதவை படகுகள் மற்றும் “ரப்பர் டிங்கிகள்” ஆகிய ஆகியவனவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடிமைப் பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்து விட வேண்டும், மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சாலையில் விழுவதால் வாகன போக்குவரத்து தடை ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை,
காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அலுவலர்களை கொண்டு மீட்புக் குழு அமைத்து போக்குவரத்தை உடனுக்குடன் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், சேதமடையும் மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை உடனடியாக மாற்றுவதற்கு தேவையான உபகரணங்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு தேவையான மருந்துகள் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திட வேண்டும் என முன்னதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து கடந்த மாதம் வட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

வலங்கைமான் தாலுகாவில் 19 கிராமங்கள் வடகிழக்கு பருவமளையில் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது,

அதில் தேவ மங்கலம், ரகுநாதபுரம், கிளியூர், வயலாக்குடி, வேடம்பூர், வடக்கு நாயக்கன் பேட்டை, சடையங்கால், அணியமங்கலம் உள்ளிட்ட 12 பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாகும்.எருமைப் படுகை, மூலவாஞ்சேரி, குருவாடி, படப்பகுடி உள்ளிட்ட ஏழு பகுதிகள் மிதமான பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாகும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் அமுதா வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய வீராணம் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம், மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *