செய்தியாளர்.ச.முருகவேலு
கண்டமங்கலம்


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் மாற்று திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் கண்டமங்கலம் வட்டார வள மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கண்டமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் வாசன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற் பார்வையாளர் அரிகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் டாக்டர் சிவராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் ஒரு வயது முதல் 8 வயது வரை உள்ள மாற்று திறனாளிகளுக்கு அவர்களுக்கு என்ன குறைபாடு உள்ளது என்று கண்டறிந்து, அவர்களுக்கு உபகரணங்கள் அரசு மூலம் கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீனு செல்வரங்கம், கண்டமங்கலம் துணைத் தலைவர் பத்மாவதி, வட்டார கல்வி அலுவலர் குணசேகர், சுமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் நாராயணசாமி ஆசிரியர், பயிற்சி செவிலியர்கள் சுரேஷ், விமலா மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *