பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் வட்டார இயக்க மேலாண்மை அலகு கட்டிடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அரியலூர் மாவட்ட வட்டார மேலாண்மை அலகு சார்பில் ஜெயங்கொண்டம் வட்டார அளவிலான சிறுதானிய பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் கூட்ட நிகழ்வு நடைபெற்றது.

இது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆனி மேரி ஸ்வர்ணா,திட்டஇயக்குனர்இலக்குவன்அறிவுறுத்தலின்படியும் வட்டார திட்ட மேலாளர் திருவரசன் வழிகாட்டுதல்படியும் இந்த உணவு திருவிழா அரியலூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக அனைத்து ஊராட்சிகளிலும் 9-ஆம் தேதி முன்னதாக நடத்தி முடிக்கப்பட்டது.

அந்த ஊராட்சி அளவில் வெற்றி பெற்ற மூன்று குழுவை தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டு வட்டார அளவில் இந்த உணவு திருவிழா நடத்தப்பட்டது இந்த உணவு திருவிழாவில் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்கள் தயார் செய்த அந்த சிறுதானிய வகை உணவுகளை காட்சிப்படுத்தியிருந் தனர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி (வ.ஊ), செந்தில்குமார் (கி.ஊ), மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுரேஷ், சத்துணவு மேலாளர் மனோகரன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மணிமேகலை, கீதா, அழகேஸ்வரி, சினேகா, ரமணி ஆகியோர் கலந்து கொண்டு தேவாமங்கலம் ஊராட்சியில் ராமாமிர்தம் குழுவிற்கு முதல் பரிசும், படைநிலை ஊராட்சியில் அண்ணா குழுவிற்கு இரண்டாம் பரிசும், உட்கோட்டை ஊராட்சியில் ஆனந்தம் குழுவிற்கு மூன்றாம் பரிசு என முதல் மூன்று இடம் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கப் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 26 ஊராட்சிகளில் உள்ள சுய உதவி குழுக்கள் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *