வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டாரங்களில், வடகிழக்கு பருவ மழையால் மூழ்கியுள்ள நெல்வயல்களில் நீரினை வடிகட்டும்போது அடிமட்டம் வரை மடை வெட்டக்கூடாது என வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டாரங்களில் தற்சமயம் பருவமழை பெய்து வருவதால் வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன் நீரில் மூழ்கியுள்ள நெல் வயல்களில் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு கூறுகையில் நீரில் மூழ்கியுள்ள நெல் வயல்களில் உள்ள நீரினை உடனே வடிகட்டுதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நாம் அவ்வாறு வடிகட்டும் பொழுது தண்ணீர் திறந்து விடும் போதும் வயல்களின் அடிமட்டம் வரை வரப்புகளின் மடைகளை வெட்டி வடிகட்டுதல் கூடாது. அவ்வாறு வடிகட்டும் பொழுது நாம் வயருக்கு அளித்த உரங்கள் மற்றும் அனைத்து விதமான சத்துக்களும் நம் வயலை விட்டு வெளியேறிவிடும்.

எனவே நாம் நெல் வயலில் வெள்ளை நீரை வடிகட்டும் பொழுது நமது நெல் வயல்களுக்கு தேவையான 2- 2.5 சென்டிமீட்டர் வரை உள்ள நீரினை வயில்களில் இருக்குமாறு வரப்பின் மடையை அமைக்க வேண்டும். அரை பரப்பளவு (தட்டுவாமடை) மடையினை அமைத்து ஒரு நெல் வயல்களுக்கு இரண்டு அல்லது மூன்று மடைகளை அமைக்க வேண்டும்.

அவ்வாறு அமைப்பதன் மூலம் 75 இருந்து 80 சதவீதம் நம் வயல்களில் உள்ள சத்துக்களை வெளியேறாமல் பார்த்துக் கொள்ளலாம். இளம் பயிர்களாக இருப்பின் தண்ணீரை வடிகட்டிய பின்பு இப்பயிரானது தலைச்சுத்து மற்றும் துத்தநாக சத்துக்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும். இதனால் இப்பயிர் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்தப் பயிர்களின் பச்சை திரும்புவதற்காக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டு இவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழியாக கைத்தெளிப்பான் கொண்டு தெறிக்க வேண்டும்.

இதன் மூலம் பயிர்களின் பச்சைத் திரும்பி ஒளிச்சேர்க்கை செய்ய ஏதுவாக அமையும். தண்ணீரை வடித்தவுடன் பஞ்சகாவ்யா கடைசல் மேம்படுத்தப்பட்டு அமிர்த கரைசல் இதனுடன் டிரைகோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகியவை கலந்து கொண்டு பயரின் மகசூல் இழப்பை தவிர்க்கலாம். வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்ப எண்ணெய் போன்றவற்றை மண்ணிற்கும் பயிர்களுக்கும் அழிப்பதால் வேர்களில் தலைக்கத்து வீணாவதை தடுப்பதோடு ஊட்டி தாக்குதல் போன்ற பிரச்சினைகள் தடுக்கப்படும்.

இப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்த காரணத்தால் சில இடங்களில் பயிர்கள் அழுகியிருக்கும் இந்த இடங்களில் ஊடு நாற்று நடவு செய்ய வேண்டும். நம் நாற்றங்களின் நாற்றுகள் மீதம் இருப்பின் அதனை பயன்படுத்தி ஊடு நாற்று நடலாம். இல்லையெனில் ஒரு நெல் குத்தில் மூன்று முதல் நான்கு செடிகள் இருந்தால் அவற்றை கலைத்து அதனை பயன்படுத்தி ஊடு நாற்று நடவு செய்யலாம். பயிர் வளர்ந்து தண்டு உருளும் தருவாயில் அல்லது பூக்கும் தருவாயில் இருந்தது என்றால் அந்த தருணத்தில் நீர் வடியாமல் இருக்கும் பட்சத்தில் முதலில் நீரை வடிகட்டிய பிறகு பச்சை திரும்புவதற்காக முதல் நாள் ஏக்கருக்கு நாலு ஹலோ டி ஏ பி உரத்தை 10 இருக்க தண்ணீரில் கலந்து வைத்து, மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர்தண்ணீரில்கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தெளிப்பதன் மூலம் உடனடியாக பச்சையம் பயிர்களுக்கு திரும்பிவிடும். இவ்வாறு மழை நீரை மேலாண்மை செய்து பயனடைமாறு குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன் விவசாயிகளை கேட்டுக் கொண்டு உள்ளார். இந்நிலையில் குடவாசல் அடுத்த அதம்பாவூர் பகுதியில் குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவராமன், மணியன், முருகன் ஆகியோர் மழைநீர் பூந்த நெல் வயல்களை பார்வையிட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *