நேச்சுரல் யோகா மையம் சார்பாக நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்வில் 100 பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்…

கோவை நேச்சுரல் யோகா மையம் சார்பாக 100 மாணவ,மாணவிகள் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10800 தோப்புகரணங்கள் போட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்வு இடையர்பாளையம் சிந்தி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

துவக்க விழாவில் நேச்சுரல் யோகா மையத்தின் நிறுவனர் பிரியா தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக நேஷனல் யோகா மைய நிறுவனர் மூத்த யோகா பயிற்சியாளர் சேவாப்பூர் மாணிக்கம்,மற்றும் மைண்ட் லிப்ட் யோகாலயா திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு,யோகாவின் ஒரு பகுதியாக மேலை நாடுகளில் தோப்புக்கரணம் ஒரு உடற்பயிற்சியாக மாறியுள்ளதையும்,, தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பேசினர்.

தொடர்ந்து தோப்புக்கரணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,கோவையில் 100 பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து உலக சாதனை படைத்தனர்.

சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நீலமேகம் நிமிலன் முன்னிலையில் எல்.கே.ஜி.பயிலும் சிறு குழந்தைகள் முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் 100 பேர் ஒவ்வொருவரும் தலா 108 தோப்புக்கரணம் என ஐந்து நிமிடத்தில் 10800 தோப்புக்கரணங்கள் போட்டு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

உலக சாதனை படைத்த மாணவ,மாணவிகளுக்கு உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நீலமேகம் நிமிலன் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *