புதுச்சேரி..
நல்லவாடு கிராமத்தில் மீன்பிடி படகுகள் கடற்கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.. இவற்றை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் ஆர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் ..

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மணவெளி தொகுதியில் உள்ள 3 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலோர பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களில் செல்ல அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் மேலும் விசைப்படகுகள் ஏற்கனவே கரைத்திரும்பி உள்ள நிலையில் மீனவ கிராமங்களில் கரையோரம் நிறுத்த வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்தும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அந்த வகையில் மணவெளி தொகுதிக்குட்பட்ட நல்லவாடு, புதுக்குப்பம்,சின்ன வீராம்பட்டினம் ஆகிய மீனவ கிராங்களில் 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இவற்றை பார்வையிட்ட சட்டப்பேரவை தலைவர் அவர்கள் மீனவ மக்களின் குறைகளை அதிகாரிகளுடன் நேரில் சென்று கேட்டறிந்தார்.

அப்போது மீனவர்கள்,நாளைய தினம் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,புயல் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பிறந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சபாநாயகர் அவர்கள் உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது துணை ஆட்சியர் வருவாய் கந்தசாமி வட்டாட்சியர்கள் பிரிதிவி அருண் அய்யாவு வருவாய் ஆய்வாளர் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உதவி பொறியாளர் நாகராஜ் காவல்துறை அதிகாரிகள் மீனவ கிராம பஞ்சாயத்து மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *