கும்பகோணம் வி. பி. எஸ்.ஆர். எஸ். நிறுவனம் சார்பில் ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் கார் அறிமுக விழா.

கும்பகோணம் வி. பி. எஸ்.ஆர். எஸ். நிறுவனம் சார்பில் ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் கார் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவிற்கு விற்பனை மேலாளர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார்.
அனைவரையும் துணை விற்பனை மேலாளர் ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஆனந்தி,அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி இணை செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

கேக் வெட்டி வாடிக்கையாளர்
களுக்கு ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் காரை எஸ்.கே.எஸ். நிதி நிறுவன இயக்குனர்
லலீத் ஜுடு அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் துணை விற்பனை மேலாளர் ஹரிஹரன்
பேசியதாவது:-

இந்திய கார் ஆர்வலர்கள் கிரெட்டா பேஸ்லிப்ட் என்ற பெரிய அறிமுகத்துடன் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டை உற்சாகமாக தொடங்க இருக்கிறது.

கிரெட்டா கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி-யாக இருக்கிறது .கடந்த 2023-ஆம் ஆண்டில் கிரெட்டாவின் 1,57,311 யூனிட்ஸ்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

இந்த நிலையில்
2024 ஹூண்டாய் கிரெட்டாவின் பேஸ்லிப்ட் வெர்ஷனுக்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது இதன் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது
புதிய டூயல்-டோன் அலாய் வீல்கள் என கிரெட்டாவின் வெளித்தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.
இன்டீரியரில் 10.25-இன்ச் இன்டகிரேடட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் கிளஸ்ட ஆகியவை கொண்ட புதிய டேஷ்போர்டு மற்றும் புதிய லெதரெட்சீட்கள், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ஏர் ப்யூரிபையர் மற்றும் பனோரமிக் சன்ரூப் என புதிய கிரெட்டா பேஸ்லிப்ட்டின்
கேபின் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது

கிரெட்டாவின் இந்த புதிய பேஸ்லிப்ட் காரில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன6 ஏர்பேக்ஸ், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற 36 நிலையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
காரில் 3 எஞ்சின் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். மொத்தம் 7 வேரியன்ட்ஸ்களிலும்
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

விழாவில் சர்வீஸ் மேலாளர் கார்த்திக், விற்பனை பிரதிநிதி வெங்கடேஷ் மற்றும் நூற்றுக்கனக்கான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *