மதுராந்தக சுற்றுவட்டார பகுதிகளில் கள்லு இறக்கினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி எச்சரிக்கை.

செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்லு இறக்குவார்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுராந்தகம் கலால் டிஎஸ்பி வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சூனாம்பேடு, அணைக்கட்டு, சித்தாமூர், மற்றும் கூவத்தூர், வெண்ணாங்குப்பட்டு கோட்டைகக்காடு, நீலமங்கலம், புத்திரன்கோட்டை, சித்தார்க்காடு, உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக பனைமரம் ஏறி கள்லு இறக்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது அதன் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையில் தனி குழு அமைத்து குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பனை மரங்களில் பாணை மற்றும் பனை மரங்களில் பாளை எனப்படும் குறுத்துகளை
வெட்டி அறவே ஒழித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இது குறித்து கடந்த 15 நாட்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிட்டுத்தக்கது.

இது குறித்து மதுராந்தகம் மதுவிலக்கு அமல்
பிரிவு போலீசாரை அப்பகுதி மக்கள் வலைதளங்களில் பாராட்டு
தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *