தென்காசி மாவட்ட அளவில் 10ம் வகுப்பு தேர்வில் 2ம் இடம் பெற்று சாதனை படைத்த பாவூர்சத்திரம் பள்ளி மாணவிக்கு திமுக சார்பில் நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகையினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நினைவுபரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
பாவூர்சத்திரம் பஞ்சாண்டியூரைச் சேர்ந்த மாணவி எபநேசர் 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, தென்காசி மாவட்ட அளவில்2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தற்போது பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் வசித்து வரும் இவரது பெற்றோர் ஆசீர்ஜெயக்குமார், ஜான்சிராணி கூலித்தொழிலாளர்கள் ஆவர்.
சாதனை படைத்த மாணவி எபநேசரை, முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் திமுக சார்பில் நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, மாவட்ட தொண்டரணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் இட்லி செல்வன், மாவட்ட மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் ஷாலி மேரி, ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளருமான தர்மராஜ், ஒன்றிய துணை செயலாளர் மாணிக்கராஜ், செல்வகுமார், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன், ராஜேந்திரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பு :- சார் இது விளம்பர செய்தி இவர் தின செய்தியில் கொடுத்துள்ள விளம்பரத்தை இத்துடன் அனுப்பி உள்ளேன் தயவு செய்து இந்த செய்தியை படத்துடன் வெளியிட வேண்டுகிறேன் .