பதப்படுத்தப்பட்ட பொட்டல உணவு பொருட்களில் முன்பக்க எச்சரிக்கை முத்திரைகள் கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு நுகர்வோர் பாதுகாப்பு மையம் வேண்டுகோள்

  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்  கடந்த ஆண்டு, முன்பக்க எச்சரிக்கை முத்திரைக்கு (FoPL) இணையாக - இந்தியா ஊட்டச்சத்து மதிப்பீடு (INR) வரைவு விதிமுறைகளை வெளியிட்டது.

 இது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலத்தின் முன்பக்கத்தில் நட்சத்திர மதிப்பீடுகளை வழங்குகிறது மேலும் இது நுகர்வோர் சரியான தேர்வுகளை தேர்ந்தெடுக்க தவறான நடவடிக்கையாகும் சி.ஏ.ஜி.யின் நிர்வாக இயக்குனர் எஸ்.சரோஜா மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ் இணைந்து இந்திய ஆரசாங்கம் பரிந்துரைக்கும்  INR ஊட்டச்சத்து மதிப்பீட்டில் அனைத்து உணவுகளிலும் குறைந்தபட்சம் நார்ச்சத்துக்கள் புரதங்கள் வைட்டமின்கள் போன்ற நேர்மறை ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குறைந்தது அரை நட்சத்திர மதிப்பீடு  அனைத்து உணவு பொருட்களுக்கும் கொடுக்க நேரிடும் நுகர்வோர்களின் சரியான தேர்வுகளை அது பாதிக்கக்கூடும் என்று INR வரம்பு எல்லைகளை எடுத்துரைத்தனர்  டாக்டர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் செயற்பாட்டாளர்கள் உட்பட பல பங்குதாரர்கள் வரைவு விதிமுறைகள் குறித்து FSSAIக்கு தங்கள் அக்கறையை முறையிட்டனர். ஒருவருடமாக FSSAI இந்த கொள்கை முடிவில் மௌனம் காக்கிறது

  தொற்றா நோய்களின் நெருக்கடியை எதிர்கொள்ள, சி.ஏ.ஜி தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் இணைந்து  உணவுப் பொட்டலத்தின் முன்பக்க எச்சரிக்கை முத்திரை (FoPL) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, ஊட்டச்சத்து மிகுந்த நல்ல உணவுகளை நுகர்வோர்கள் தேர்வு செய்ய அறிவூட்டி அவர்களை, இந்திய அரசாங்கம் FoPL கொள்கை முடிவை தேர்ந்தேடுக்க வலியுறுத்தி குரல் கொடுக்கத் தூண்டுகிறது கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FoPL கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அக்கறை கொண்ட பெற்றோர்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இந்திய அரசாங்கத்தின்  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர்   உணவுப் பொட்டலத்தின் முன்பக்கத்தில் தெளிவான எச்சரிக்கை முத்திரைகளின் (FoPL) அவசியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்த இயக்கம் தீவிரமடைந்து வருகிறது

  ஆரோக்கியமான தேர்வுகளை நோக்கி நுகர்வோர்களை வழிநடத்த தெளிவான, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உணவு பொட்டலங்களின் முன்பக்க எச்சரிக்கை முத்திரைகள்  கண்டிப்பாக தேவை. அனைத்து நுகர்வோர் அமைப்புகளும் தொடர்ந்து FoPL ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது மற்றும் நாடு முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் தேர்வுகளை மேம்படுத்துவதற்கான நோக்கத்தில் உறுதியாக உள்ளது  எனவே பதப்படுத்தப்பட்ட பொட்டல உணவு பொருட்களில் முன்பக்க  எச்சரிக்கை முத்திரைகள் கட்டாயமாக்கிட  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு பொதுமக்கள்  நலன் கருதி   நுகர்வோர் பாதுகாப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *