தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில்: தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே பத்திரிகையாளர்களுக்கு மாநகராட்சி பகுதியில் மானிய விலையில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் திண்பண்டகள் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக சார்பில் வலியுறுத்தி பேசினார்.