ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டியூட் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா.. நான்காவது சீசன் யாதுமாகி நிற்பவள் இரண்டாவது ஆண்டு வாவ் விருதுகள் வழங்கும் விழா..மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு என ஒரே மேடையில் அசத்தலாக நடைபெற்ற மகளிர் தின விழா..

கோவையில் காந்திபுரம்,டவுன்ஹால்,ஹோப்ஸ் ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான பேஷன் டிசைனிங் பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் சுகுணா சண்முகம்..பெண்களை சுய தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் இந்த பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர்,பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தின விழாவை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இவரது பேஷன் ஆர்ட் இன்ஸ்டியூட் மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு பயிற்சி நிறைவு பட்டமளிப்பு விழா, நான்காவது சீசன் யாதுமாகி நிற்பவள் ,இரண்டாவது ஆண்டாக வாவ் விருதுகள் வழங்குவது,மற்றும் ஆடை அலங்கார அணி வகுப்பு என முப்பெரும் விழா கோவை கொடிசியா அருகில் உள்ள ஜே.ஆர்.அரங்கில் நடைபெற்றது..

பேஷன் ஆர்ட் இன்ஸ்டியூட் மையத்தின் நிறுவனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருமதி உலக அழகி பட்டம் வென்றவரும்,பெண்களுக்கான அழகு கலை ஆலோசகரும் ஆன ஜெயா மகேஷ் கலந்து கொண்டார்.

உலக மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இவ்விழாவில், பேஷன் ஆர்ட் இன்ஸ்டியூட் மையத்தில் பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில், பெண்கள் அவர்களது சொந்த முயற்சியில் டிசைன் செய்த ஆடைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் அணிந்து மேடையில் அணிவகுப்பு நடத்தினர்.

தொடர்ந்து பெண்களுக்கான பல்வேறு போட்டிகள். நடைபெற்றன.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு யாதுமாகி நிற்பவள் வாவ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..என்.ஐ.ஈவெண்ட்ஸ் ராஜா மற்றும் அவரது குழுவினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *