எஸ்.செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் தீவிர வாகன பிரச்சாரம்
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழக மற்றும் புதுவையில் நடைபெற உள்ளது அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்பமான தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி சார்பாக காளியம்மாள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதி சீர்காழி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதல் கட்சி தொண்டர்களுடன் திறந்தவெளி வாகனத்தில் பொது மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக மணி கிராமம் ,சம்பா கட்டளை, ராதா நல்லூர் ,ஆலங்காடு, திருவெண்காடு, பெருந்தோட்டம் பகுதிகளில்நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள்தீவிர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.