அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்களை தாக்கிய ரவுடிகளை கைது செய்ய கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசு பேருந்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

          கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோட்டம். கும்பகோணம் நகர பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மற்றும் செய்தியாளர்கள் நியூஸ் ஜே மாரிமுத்து, மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் குமார் ஆகியோர் நேற்று இரவு கும்பகோணம் பாலக்கரை அருகே ரௌடிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

 அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் செய்தியாளர்கள் தாக்கப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதல் நடத்திய ரவுடிகள் அனைவரையும் கைது செய்து குற்றவாளிகளை தப்ப விடாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும்  அரசு பேருந்து ஓட்டுனர் நடத்துனர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் 12 மணி அளவில் தஞ்சாவூர் ஜெயமாலபுரம் நகர பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பொருளாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஆர்.நீலகண்டன், நிர்வாகி சக்திவேல், ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவர்   துரை‌மதிவாணன், கும்பகோணம் சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், பொருளாளர் சி.ராஜமன்னன், பி.முருகவேள்,           சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு, கும்பகோணம் மத்திய சங்க தலைவர் காரல் மார்க்ஸ், முருகானந்தம், ராஜசேகர், டிஎம்எம்கே பொருளாளர் அறிவழகன், நேதாஜி சங்க பொதுச் செயலாளர் ஜெயக்குமார், ரிவா சங்க நிர்வாகி வி.திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *