மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு
மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக்கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. அங்கு 750 போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

மதுரை மருத்துவக்கல்லூரி மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கானவாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது.

இதற்காக மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலூர் சட்டமன்ற தொகுதியில் |272 வாக்குசாவடிகளும், கிழக்கு தொகுதியில் 325 வாக்குசாவடி களும், வடக்கு தொகுதியில் 240 வாக்குசாவடி களும், தெற்கு தொகுதியில் 215 வாக்குசாவடிகளும், மத்திய தொகுதியில் 239 வாக்குசாவடி களும், மேற்கு தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் என மொத்தம் 1573 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடை பெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக் குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு எந்திரங் கள் ஆகியவை முழுவதுமாக பூத் ஏஜெண்டுகள் முன்பாக சீல் வைக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதற்காக மருத்துவக் கல்லூரி வளாகத் தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையான ஸ்ட்ராங்க் ரூம்மில் வாக்குப்பதிவு எந் திரங்கள் முழுவதுமாக வைக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் அதிகாரிகளின் சோதனைக்குப் பின்பாக ஒவ்வொரு அறைகளும் பூட் டப்பட்டது. இதனை தேர்தல் நடத்தும் அதிகாரிகள், கட்சி முகவர்கள், போலீசார் உள்ளிட்டோர் உறுதி செய்து கையெழுத்திட்ட பின்பாக அந்த பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு பெட்டி கள் வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அதிகாரி சங்கீதா, உதவி தேர்தல் அதிகா ரிகள் ஷாலினி, மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் கல்லூரி வளாகம் முழுவதிலும் 220-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழுவதுமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது.தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளின் போது சீல் உடைக்கப் பட்டு வாக்கு பெட்டிகள் எடுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை பகுதிக்கு யாரும் எளிதில் நுழைந்து விடாதபடி தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒவ் ளது. வொரு சீல் வைக்கப்பட்ட அறை முன்பு துப்பாக்கி ஏந்தியராணுவவீரர்
களும் அதற்கு அடுத்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசாரும், பின்னர் வெளி பகுதியில் நகர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக 72 ராணுவ வீரர்கள், 72 ஆயுதப்படை வீரர்கள் போலீசார் என7:50 பேர் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படை யில் பணிபுரி கிறார்கள்.


நாள்தோறும் வாக்கு எண்ணிக்கை மையத்தை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் தினசரி பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் நடப்பதை கண்காணிப்பு | கேமரா மூலம் எல்.இ.டி. திரையில் அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆவணம் கொண்டு செல்லப்பட்ட சம்பவத் தால் சர்ச்சை ஏற்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட குளறுபடி ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் இந்த நாடாளுமன்றத் தேர்த லின்போது வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடுமையான பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு முழுவதிலும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *