திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார் சாலையில் அமைந்துள்ள தேவர் மஹாலில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நத்தர்ஷா பள்ளிவாசல், ஜீவா நகர், வள்ளுவர் நகர், கல்யாணசுந்தரம் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த முகாமை தொடங்கி வைத்து, உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினார்.
மண்ணை க. மாரிமுத்து.