வைகை யாற்றில் எழுந்தருள்வதற்காக மதுரை வந்த அழகர் நேற்று மலைக்கு திரும்பினார். அவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர்

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.19ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி் யது. ஏப்.21ம் தேதி தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்ட அழகருக்கு ஏப்.22ம் தேதி அதிகாலை மூன்றுமாவடியில் மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நிகழ்ச்சி நடந்தது.

இதைத் தொடர்ந்து ஏப்.23ல் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் எழுந்தருளினார். ஏப். 24ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் ராமராயர் மண்ட பத்தில் விடிய, விடிய தசாவதாரம் நடந்தது.

வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் மலையில் இருந்து மதுரை வரும் அழகர், சுமார் 494 மண்டக படிகளில் எழுந்த ருளினார். மதுரை நிகழ்ச் சிகள் முடிந்து, மலைக்கு திரும்பி செல்லும் வழியில் நேற்று முன்தினம் இரவு சுந்தர்ராஜன்பட்டியில் அமைந்துள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது அழகரின் பயண களைப்பை போக்கிட, அவ ரது திருமேனியின் கை, கால்கள் மற்றும் உடம்பு பகுதிகளை அம்பி பட்டர் தனது கைகளால் அமுக் கிவிட்டு அசதி போக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 10 நிமிடம் அழகரின் அசதி போக்கப்பட்டது.100 கிமீ சுற்றி வந்த அழகருக்கு கை, கால்களை பட்டர் அமுக்கி விட்டார்.

பூப்பல்லக்கு முடிந்ததும், அழகர்மலையை நோக்கி அழகர் புறப்பட்டார். புதூர், கடச்சனேந்தல், அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக நேற்று காலை கோயில் கோட்டை வாசலை வந்தடைந்தார். அங்கு கோயில் யானை சுந்தரவல்லி மற்றும் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 11.55 மணிக்கு அழகர் தன் இருப்பிடம் வந்த டைந்தார். அவரை 2 டன் மலர்கள் தூவி வரவேற்ற னர். மேலும் பெண்கள் வெண்பூசணியில் சூடம் ஏற்றி அழகருக்கு திருஷ்டி கழித்த பின் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். இன்று காலை உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *