கல்லிடைக்குறிச்சியில் டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி தந்தையின் கனவை நிறைவேற்றியதாக மகன் பேட்டி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசிப்பவர் வேல்முருகன், இவர் அப்பகுதியில் சிறிய டீக்கடை நடத்தி தொழில் செய்து வருகின்றார். இவரது மகன் பேச்சி (26) கடந்த வாரம் வெளியான யு பி எஸ் சி தேர்வில் 576 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் ஒன்று முதல் 12 வரை கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும், தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியர் படிப்பு முடித்து யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைப்பது நோக்கமாக கொண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த நான்கு முறை தேர்வு எழுதி வெற்றி கிடைக்காத பொழுதிலும் அவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தற்போது வேலை பார்த்து. பின் விடாமுயற்சியாக கடந்தாண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தாயார் லட்சுமி பீடி சுற்றும் தொழிலாளியாகவும், சகோதரர் சென்னையில் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார். தந்தை வேல்முருகன் டீக்கடை மட்டும் வைத்து குழந்தைகளின் படிப்புக்காக அதாவது மகன் கலெக்டராக வேண்டும் என்ற கனவை நினைவாக்க சொந்த வீட்டையே விற்று படிக்க வைத்துள்ளார். தற்போது தேர்வில் மகன் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் எனது கனவு நிறைவேறியது என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *