மதுரை விமான நிலையத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…. கொல்கத்தா வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி

கொல்கத்தா விமான நிலையத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் ஆன்லைன் மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதில், விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மதியம் 1 மணியளவில் வந்தது. வெடிக்கும் என தெரிவிக்கப் பட்டு இருந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினர் அப்போது வெடிகுண்டுகள் எதுவும் இல்லாததால், அந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது இதற்கிடையே, இந்த வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிளும் கண் காணிப்பு பணிகளை தீவிரப்ப டுத்த இந்திய விமான நிலைய ஆணைக்குழு உத்தரவிட்டது.

அதன் பேரில் மதுரை விமான நிலையத்தில் நிலைய இயக்குநர் முத்துக்குமார், முதன்மை பாதுகாப்பு அலுவ லர் கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் மற்றும் மதுரை நகர தெற்கு காவல் உதவி ஆணையர் செல்வகுமார் மற்றும் அதி காரிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தினை நடத்தினர்.

அதன் முடிவில் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்வதுடன், பாதுகாப்பு பணிகளை தீவி ரப்படுத்த முடிவு செய்யப்பட் டது. இதையடுத்து அதிக எண் ணிக்கையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *