அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பாக பெரம்பலூரில் நடைபெற்ற திருக்குறள் நாடகங்கள் துவக்க விழா:

133 எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, 1330 குறட்பாக்களுக்கும் 1330 கதைகளை தயாரித்து, அதனை ஏழு அடி உயர புத்தகமாக வெளியிட்ட நிலையில், இந்த 1330 கதைகளை, நாடக வடிவில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் திட்டத்தினை துவங்கி, அதன் துவக்க விழாவை பெரம்பலூரிலுள்ள தனியார் கூட்டரங்கில் நடத்தியது.

இதில் கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கான முதல் குறளுக்கான “சாமந்திப்பூ” என்ற தலைப்பிலான கதை அரங்கேற்றம் செய்யப்பட்டது.

ஒரு கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, எழுத்துகளுக்கு முதல் அகரம், இந்த உலகிற்கு முதல் இறைவன் என்பதை மையக் கருத்தாக கொண்டு நாடகத்தை அரங்கேற்றியது.

இந்த நிகழ்வில் அகழ் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் செ. வினோதினி வரவேற்புரை வழங்கினார். பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவையினுடைய செயலாளர் கி. முகுந்தன் தலைமை ஏற்று நடத்தினார். மருத்துவர்களான புவனேஷ்வரி, பி. விஜய ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு கலைக்கல்லூரி அரியலூர் மாவட்டத்தின் தமிழ் துறை பேராசிரியர், முனைவர் க. தமிழ்மாறன் அவர்கள் “நாடகத்தின் தொடக்கமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நிறுவனர்கள், மற்றும் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *