தேனி மாவட்டம்
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 29.04.2024 முதல் 28.05.2024 வரை நடைபெற உள்ளதை ஆடு வளர்ப்போர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர் வி ஷ ஜீவனா. தகவல்

ஆடுகளில் ஏற்படும் வியாதிகளில் பெருமளவில் ஆடுகளை தாக்கும் நோய் ஆட்டுக் கொல்லி நோய் பி பி ஆர். என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் உள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை இந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 29.04.2024 முதல் 28.05.2024 வரை 30 நாட்களுக்கு நடைபெறுகிறது. 

ஆட்டுக்கொல்லிநோய்
ஆட்டுக் கொல்லி நோய் என்பது மார்பில்லி வைரஸ் மார்பில் வைரஸ் வகையைச் சார்ந்த ஒரு கொடிய வைரஸ் தொற்றாகும். இந்நோயினால் அதிக காய்ச்சல், கழிச்சல், இருமல், மூக்கிலிருந்து சளிவடிந்து உறைதல், வாயின் உட்புறம் ஈறு மற்றும் நாக்கில் அதிக உமிழ்நீர் சுரத்தல் மற்றும் தீனி உட்கொள்ளாத நிலை ஆகியவை ஏற்பட்டு ஆடுகள் இறக்க நேரிடும். இந்நோயானது நோயுற்ற ஆடுகளின் உமிழ்நீர், மூக்கிலிருந்து வடியும் நீர், சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் நேரடியாக நோயில்லாத ஆடுகளுக்கு பரவும். இந்நோய் தாக்கிய பின்னர் சிகிச்சை செய்து வந்தாலும், ஆடுகள் சினையுறாமலும், போதிய எடை கூடாமலும் இருந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துக் கூடும்.

தடுப்பூசிப்பணி
தேனி மாவட்டத்தில் சுமார் 46,144 செம்மறியாடுகளும் 60,081 வெள்ளாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்திலுள்ள 53 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கபட்டு, வருகின்ற 29.04.2024 முதல் 28.05.2024 வரை 30 நாட்களுக்கு தடுப்பூசிப் பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப் பணி நான்கு வயதிற்கு மேல் உள்ள சினையற்ற செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு வருடம் ஒருமுறை போடப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா கூறியுள்ளார்

மேலும் ஆடுகளுக்கு காதுகளில் அடையாள வில்லைகள் பொருத்தப்பட்டு இணைய வழியாக ஆடுகள் பற்றிய விவரங்கள் மற்றும் உரிமையாளர்களின் ஆதார்எண், கைப்பேசி எண் ஆகிய தரவுகள் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட விவரம் போன்றவை இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும்.

ஆட்டுக் கொல்லி நோயினை தடுப்பதற்கான நடைபெறும்  இலவச தடுப்பூசி முகாமினை ஆடு வளர்ப்போர் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *