மதுரை மாநகராட்சியில் கோடை காலம் முழுவதும் தடையின்றி குடிநீர் சப்ளை…..

மாநகராட்சி கமிஷனர் தகவல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் குடிநீருக்காக ரூ.150 கோடி நிதி வழங்க உத்தர விட்டுள்ளதை தொடர்ந்து, மதுரை மாநகராட்சியில் வசிப்போ ருக்கு கோடைகாலம் முடியும் வரை தடையின்றி குடி நீர் சப்ளை செய்ய முடியும் என மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதற்காக, கூடுதலாக ரூ.150 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி யுள்ளார். இந்நிலையில், அவரது உத்தரவை அமல்ப டுத்தும் விதமாக மதுரை மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைக்க மதுரை மாநகராட்சி ஏற்பாடு களை மேற்கொண்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி கிழக்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் மற்றும் மேற்கு என, மாநகராட்சியின் பரப்பளவு 51.82 சதுர கிலோ மீட்டரில் இருந்து 147.99 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. வார்டுகளின் எண்ணிக்கையும் 100 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மதுரை மக்களின் குடிநீர் தேவையில் 5 மண்டலங்களை கொண்டுள்ளது.

இதன் காரணமாக மதுரை மாகராட்சியின் மக்கள் தொகை 14.70 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதால் குடி நீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

115 எம்எல்டியை வைகை ஆறு கொடுத்து வருகிறது. இது தவிர வைகை ஆற்றின் படுகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறுகள் மூலம் 20 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப் படுகிறது. மேலும் காவிரி கூட்டுக்குடி நீர் திட்டத்தின் மூலம் 11 எம்எல்டி தண்ணீர் மற்றும் மாநகர் பகுதிகளில் உள்ள கிணறுகள் மூலம் 10 எம் எல்டி என 156எம்எல்டி தண்ணீர்பெறப்பட்டு நாள் ஒன்றுக்கு தனிநபர் ஒருவருக்கு 95லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்ததாக, முல்லைப்பெரியாறு அணையிலி ருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1600 கோடி மதிப் பீட்டில் துவங்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் கூறுகையில், “நாள் தோறும் சுமார் 160 எம்எல்டி குடிநீர் மதுரை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வரு கிறது.

வைகை அணை நீர் மட்டம் தற்போது 57.41 அடியாக உள்ளது. மேலக் கால், அச்சம்பத்து போன்ற இடங்களில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை வைத்து கோடை காலம் முழுவதும் மதுரை மக்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *