தென்காசி – ஆயிரப்பேரி தெட்சணாமூர்த்தி கோவிலில்குரு பெயர்ச்சி விழா

தென்காசி ஆயிரம் பெரிய சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகுரு தெஷ்ணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயத்தில் உள்ள தெட்சணாமூர்த்தி கோவிலில் 01.05.2024 அன்று குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது

ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் திருவடித் தொண்டராகிய தெ.க.அப்பாவு சுவாமிகள் அருளாசியால் நிகழும் மங்களகரமான 1199-ம் ஆண்டு ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 10ம் தேதி. 01-05-2024 புதன்கிழமை மாலை 3.57 மணிக்கு அருள்மிகு குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார்.

குரு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு வரும்
01-05-2024 புதன்கிழமை மாரி 3-57 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். 02-05-2024 வியாழக்கிழமையன்று அதிகாலை 3.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, மஹா அபிஷேகம் மற்றும் காலை 5-45 மணிக்கு தீபாரதனையும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அர்ச்சனைகளும் நடை பெறும் மேலும் மாலை 5-30 மணிக்கு புஷ்ப அபிஷேகமும், இரவு 8-00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.

சிவபெருமானே கல்லால மாத்தின் கீழிருந்து சனகாதி முனியர்கள் நால்வருக்கும் உபதேசம் செய்தமையால் ஆலங்குடியில் அமர்ந்துள்ள இறைவன் ஸ்ரீ குரு தெக்ஷணாமூர்த்தி என அழைக்கப்படுகிறார். ஆதி சங்கரர், சுந்தரர் முதலியோர் ஸ்ரீ குரு தெஷ்ணாமூர்த்தியை வணங்கி 2 சிவஞானம் பெற்றவர்.

இந்திரன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் தமது பெயர்களால் தீர்த்தமும் இ சிவலிங்கமும் நிறுவி பூஜை செய்து தமது கஷ்டங்களைப் போக்கிக் கொண்டனர், பஞ்சமாபாதகச் செயல்களைச் செய்து பேயாய் அலைந்து சுவாசனன் என்ற மன்னன் அகத்தியரின் உபதேசப்படி, இத்தலத்தை அடைந்து தீர்த்தமாடி இழந்த செல்வம் முதலியவைகளைப் பெற்றான்.

ஸ்ரீபவானி ஸ்ரீலஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி அருளாசியில் இவ்விழா நடைபெறுகிறது

ஒவ்வொரு குரு வாரமும் வியாழக்கிழமை காலை பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு அபிஷேக பூளஜ நடைபெறும் 02-05-2024 வியாழக்கிழமையன்று நடைபெறும் புஷ்ப அபிஷேகத்திற்கு புஷ்பங்களைக் இ கொண்டுவரும் பக்தர்கள் மாலை 5-00 வளிக்கு முன்பாக கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

01.05.2024அன்று நடைபெற உள்ள குருபெயர்ச்சிவிழா மற்றும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு தென்காசி ஸ்ரீ ராஜ குரு தட்சிணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயம் சார்பில் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ ஐயப்ப சாது கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *