திண்டுக்கல் மாவட்டம்
முதன்மை நிலை விளையாட்டு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள்(CoE), விளையாட்டு விடுதிகள் (SH) மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் (SHE) பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

2024-2025-ஆம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்த விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) – (6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகள்) – மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் விபரம்:-
தடகளம் (ஆண் மற்றும் பெண்), குத்துச்சண்டை (ஆண் மற்றும் பெண்), மேசைப்பந்து (ஆண் மற்றும் பெண்), டேக்வாண்டோ (ஆண் மற்றும் பெண்), பளுதூக்குதல் (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 07.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், இறகுப்பந்து (ஆண் மற்றும் பெண்), வில்வித்தை (ஆண் மற்றும் பெண்) ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு சென்னை நேரு பூங்கா விளையாட்டரங்கத்தில் 07.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண் மற்றும் பெண்), நீச்சல்(ஆண் மற்றும் பெண்) ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் 07.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், டென்னிஸ் (ஆண் மற்றும் பெண்) விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு சென்னை நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் 07.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், சைக்கிளிங் (ஆண் மற்றும் பெண்) விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு செங்கல்பட்டு மேலகோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் (TNPESU) 07.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும் நடைபெறவுள்ளன.


விளையாட்டு விடுதி (Sports Hostel) – (7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகள்)- மாவட்ட அளவிலான தேர்வுகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் விபரம்:-
தடகளம் (ஆண் மற்றும் பெண்), கூடைப்பந்து (ஆண் மற்றும் பெண்), கால்பந்து (ஆண் மற்றும் பெண்), கைப்பந்து (ஆண் மற்றும் பெண்), ஹாக்கி (ஆண் மற்றும் பெண்), கபாடி (ஆண் மற்றும் பெண்), கையுந்துபந்து (ஆண் மற்றும் பெண்), கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), நீச்சல் (ஆண்கள் மட்டும்) – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கான தேர்வு 10.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும் மற்றும் பெண்களுக்கான தேர்வு 11.05.2024 அன்று காலை 7.00 மணிக்கும் நடைபெறவுள்ளன.


விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு (Sports Hostel – State Level Direct Selection) (7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகள்) நடைபெறும் இடம் மற்றும் நேரம் விபரம்:-
குத்துச்சண்டை (ஆண் மற்றும் பெண்), வாள்விளையாட்டு (ஆண் மற்றும் பெண்), ஜுடோ (ஆண் மற்றும் பெண்), பளுதூக்குதல் (ஆண் மற்றும் பெண்), ஸ்குவாஷ் (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் ஆண்களுக்கான தேர்வு 13.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், பெண்களுக்கான தேர்வு 14.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், டேக்வாண்டோ (ஆண் மற்றும் பெண்) விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு கடலுார் மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆண்களுக்கான தேர்வு 13.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், பெண்களுக்கான தேர்வு 14.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், மல்லர்கம்பம் (ஆண்கள் மட்டும்) வீரர்களுக்கான தேர்வு விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 13.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், மல்யுத்தம் (Wrestling) (ஆண்கள் மட்டும்), வூஷூ (Wushu) (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு திருச்சி மாவட்ட விளையாட்டரங்கத்தில் 13.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும் நடைபெறவுள்ளன.


சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE) (கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு) தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் விபரம்:
தடகளம் (ஆண் மற்றும் பெண்), குத்துச்சண்டை (ஆண் மற்றும் பெண்), கபாடி (ஆண் மற்றும் பெண்), பளுதுாக்குதல் (ஆண் மற்றும் பெண்) ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 06.05.2024 அன்று காலை – 7:00 மணிக்கும், கூடைப்பந்து (ஆண் மற்றும் பெண்), கையுந்துப்பந்து (ஆண் மற்றும் பெண்), கைப்பந்து (ஆண் மற்றும் பெண்), கால்பந்து (ஆண் மற்றும் பெண்), வாள் விளையாட்டு (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் 06.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், ஹாக்கி (ஆண் மற்றும் பெண்) விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு சென்னை எம்ஆர்கே ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 06.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும், நீச்சல் (பெண்கள் மட்டும்) – சென்னை வேளசேரி நீச்சல் குள வளாகத்தில் 06.05.2024 அன்று காலை 7:00 மணிக்கும் நடைபெறவுள்ளன.


சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான (SHE) விண்ணப்பங்களை 05.05.2024 அன்று மாலை 5.00 மணிக்குள்ளும், முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 06.05.2024 அன்று மாலை 5.00 மணிக்குள்ளும், விளையாட்டு விடுதி (SH) சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 08.05.2024 அன்று மாலை 5.00 மணிக்குள்ளும் இளையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு(பணி நேரம் காலை – 10:00 மணி முதல் மாலை – 5:45 வரை) விவரம் பெறலாம்.
மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் 26.04.2024 முதல் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைபேசி எண் வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *