சேத்தியா தோப்பு குறுக்கு ரோடு பகுதியில்
தொடரும் மின்மோட்டார் திருட்டு தொடர்ந்து நான்காவது மின்மோட்டரையும் திருடுகொடுத்த விவசாயி வேதனை

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு குறுக்குரோடு பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலை செல்கிறது. இந்த சாலை அருகில் உளள விவசாய நிலப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் மின் மோட்டார் வைத்து பாசனம் செய்து வருகிறார்கள். தற்போது இப்பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் இங்குள்ள விவசாயி லலிதா பாலகுரு என்பவர் நான்காவது முறையாக தனது மின்மோட்டார் திருடுபோய் உள்ளதாக வேதனையோடு புகார் அளித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தனது 4 மோட்டரும் தொடர்ந்து திருட்டுப் போய் உள்ளது எனவும், இப்பகுதியில் இதுவரை பல விவசாயிகளின் 70க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் திருடுப் போய் உள்ளது. இதுவரை குற்றவாளிகளும், திருடு போன மின்மோட்டார்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என வேதனையோடு விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு சிரமங்கள் கடன் பட்டு விவசாயம் செய்து வரும் நிலையில் விவசாயத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் மின் மோட்டார் தொடர்ந்து திருடு போவது தங்களை தற்கொலை செய்யும் அளவிற்கு கொண்டு செல்வதாக விவசாயிகள் கண்ணீரோடு குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையில் பல புகார்கள் அளித்துள்ள நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். தங்களை காக்க வேண்டும் என்றால் இப்பகுதியில் உள்ள திருடு போகும் மின்மோட்டார் களையும் அதனை திருடும் நபர்களையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விவசாயத்தில் நாங்கள் லாபம் சம்பாதிக்கவில்லை தொடர்ந்து பயிர் செய்து வருவதால் அதனை விடாமல் செய்து வருகிறோம் எங்களின் வாழ்வாதாரம் இதுதான் காவல்துறை இனிமேலும் அலட்சியம் காட்டாமல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *