ஆய்க்குடி பகுதியில் கிராமப்புற வேளாண்மை பயிற்சி – பேரணி

தென்காசி

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் பங்கேற்ற கிராமப்புற வேளாண்மை பயிற்சியை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ராமலிங்கம் மற்றும் உதவி பேராசிரியர்கள் முனைவர் ரிபா ஜாக்கப் முனைவர் அரவிந்த் வழிநடத்தலுடன் நான்காம் ஆண்டு பயின்று வரும் வேளாண் கல்லூரி மாணவிகள் ஹரினா.ஆ.ம. ஜெயஸ்ரீ.சு, கௌசல்யா.கு. பாண்டிச்செல்வி.பா. ராகவி.மா, சிந்து மோனிக்கா.ஜோ, சுதர்சினி.செ. ஹீன் ஜோஷ்னா.சு, அயறின் ஜெர்சி.மோ, ராகவி.மா.ரா ஆகியோர் கொண்ட பத்துபேர் கொண்ட குழுவாக தென்காசியில் தங்கி 50 நாட்களுக்கு கிராமப்புற வேளாண்மை பயிற்சி அனுபவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கிராமப்புற வேளாண்மை பயிற்சியின் பனிரெண்டாம் நாளான 23.04.2024 அன்று ஆய்க்குடி அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளயில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மாணவர்களுக்கு மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மரங்களை வளர்க்கும் முறை குறித்தும் மரங்களின் முக்கயித்துவம் குறித்தும் செய்முறை விளக்கம் அளித்தனர் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

வேளாண் உதவி அலுவலர் சிவக்குமார் அவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு தலைமையாற்றினர்.

மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டியும் விதைகளை விதைக்கும் பணியில் ஈடுப்படனர் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. கற்பகவள்ளி அவர்கள் தலைமையேற்று மாணவர்களை வழிநடத்தினார்.

பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஊர்பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *