தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புலத்தின்கீழ் இயங்கும், தொழில் மற்றும் நில அறிவியல்துறை, சித்த மருத்துவத்துறை, சுற்றுச்சூழல் , மூலிகை அறிவியல் துறை ஆகிய மூன்று துறைகளுடன் அரசு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரத்தநாடு,
கால்நடை மருத்தவம் மற்றும் அறிவில் பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்02.05.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

கல்லூரி மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் (Skill Development)
பயிற்சிகள் வழங்கப்படுதல். சித்தமருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை
சார்ந்த ஆய்வுகள் போன்றவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல். ஒரத்தநாடு கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள CCSEA பதிவு செய்யப்பட்ட ஆய்வக விலங்கு
இல்ல வசதிகள் சித்த மருத்துவத் துறை மற்றும் சுற்றுச்சூழல் மூலிகை அறிவியல் துறை
மாணவர்களுக்கும் விரிவுபடுத்துதல்.
மருத்துவ தாவரங்கள் மற்றும் சித்த மருந்துகள் பற்றிய அறிவு பரிமாற்றம் இரு தரப்பினரும்
பல்வேறு நோய்களுக்கான மருத்துவ தாவரங்கள், மருத்துவ தாவரங்களை அங்கீகரித்தல்,
செயலில் உள்ள தாவர மூலக்கூறுகளை பிரித்தெடுத்தல், தனிமைப்படுத்துதல் மற்றும்
அடையாளம் காணுதல்
தரமான மற்றும் அளவு பைட்டோ கெமிக்கல் பரிசோதனை. தாவரங்கள், சித்தா மற்றும்
மூலிகை உருவாக்கும் முறைகள் மற்றும் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க
கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கான சித்தா தயாரிப்புகளின் மருந்தியல் மதிப்பீடு. இரு கல்லூரிகளிலும் உள்ள ஆய்வக வசதிகளை பரிமாறிக் கொள்வார்கள்.
TANUVAS மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இரு நிறுவனங்களிலும் உள்ள நிபுணத்துவத்தைப்
பயன்படுத்தி பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பயிற்சிகள், குறுகிய படிப்புகள்,
கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது மாநாடுகள் போன்ற கூட்டுக் கல்வி நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் முன்னிலையில் பதிவாளர் முனைவர் சி. தியாகராஜன் அவர்கள் கையொப்பமிட்டார்கள். ஒப்பந்தத்தின்போது ஒரத்தநாடு, அரசு கால்நடை மருத்துவம் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம் புலத்தலைவர் முனைவர் N. நர்மதா, பேராசிரியர் ரங்கநாதன், தமிழ்ப்
பல்கலைக்கழக அறிவியல் புலத்தலைவர் பேராசிரியர் ரெ. நீலகண்டன், சித்தமருத்துவத்
துறைத்தலைவர் பேராசிரியர் பாரதஜோதி, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத்தலைவர் இணைப்பேராசிரியர் கு.க.கவிதா, கண்காணிப்பாளர்(பொ) மு. கார்த்திகேயன்
ஆகியோர் கலந்துகொண்டன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *