சென்னை எண்ணுார் அன்னை சிவகாமி நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் வளாகத்தில் புதியதாக 45 அடி உயரத்தில் பீலிக்கான் முனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 71 அடி உயரமுள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி
மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவெற்றியூர்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1 தேதி அன்று புதன்கிழமை முதல் கால யாக சாலை பூஜை மஹா கணபதி ஹோமம் லஷ்மி பூஜை, நவக்கிரஹ ஹோமம் பூர்ணாவதி தீபாராதனைகள் நடைப்பெற்றது

இரண்டாம் கால யாகசாலை பூஜை புன்னியாவதனம், புதிய விக்கிரகங்களுக்கு அஷ்டரி கிரிஷினயகள், எந்திரசாபனம், பிரதிஷ்டை பூஜை ஹோமம் தீபாராதனை பிரசாரம் வழங்கப்படடது.

இதனையடுத்து நான்காம் கால யாகசாலை புன்னியாவதனம், ரிக்ஷாபந்தனம், கலச பூஜை, மஹா பூர்ணாவதி தீபாராதனை, கலசம் புறப்பாடு செய்யப்பட்டுபுதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிதாக நிறுவப்பட்டுள்ள 45 அடி பீலிக்கான் முனீஸ்வரர், மற்றும் ஸ்ரீ வாராகி அம்மன், 43 அடி உயரமுள்ள அங்காள ஈஸ்வரி அம்மன், 40 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை, பரிவார மூர்த்திகள் 72 அடி உயரமுள்ள ராஜ கோபுர த்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு புனித நீரை ஊற்றபட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கமிட்டனர் . பக்த்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு கலச நீர்ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், பனை தொழிலாளர் வாரிய தலைவர் ஏர்ணாவூர் நாராயண், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி. மு தனியரசு, மாமன்றஉறுப்பினர்கள்கள் சொக்கலிங்கம், தம்பையா பொதுமக்கள்கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *