பெரம்பலூர் மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதடைந்த திறன்மின்மாற்றிக்கு பதிலாக புதிய திறன்மின் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. நாளை(5.5.2024) மாலைக்குள் சீரான மின்சாரம் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், தகவல்

பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் பெரம்பலூர் கோட்டம் 110 /33 -22 -11 கிலோ வோல்ட் கொண்ட மங்களமேடு துணை மின் நிலையத்தில் கடந்த 1.5.2024 இரவு 8 மணி அளவில் 16 மெகாவாட் 110/ 11 கிலோ வோல்ட் திறன் மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்விநியோகம் தடைபட்டது.

இதனால் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், மங்களமேடு, வி களத்தூர், எறையூர், சின்னார் அணை, முருக்கங்குடி, தேவையூர் தம்பை, ராஞ்சன்குடி, சாத்தனவாடி, நகரம், நமையூர் அனுக்கூர் குடிகாடு, அயன் பேரையூர், பெருமத்தூர் ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீரான மின்விநியோகம் தடைபட்டது.

இதனையடுத்து 1.5.2024 அன்று இரவு 10 மணி அளவில் கழனிவாசலில் உள்ள 33 /11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் மற்றும்
33/ 11 கிலோ வாட் திறன்கொண்ட நன்னை துணைமின் நிலையங்களில் இருந்து மாற்று மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மங்களமேடு துணை மின் நிலையத்தில் பழுதான திறன் மின்மாற்றியை மாற்றம் செய்து புதிய திறன் மின்மாற்றி அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. புதிய திறன் மின்மாற்றி அமைக்கும் பணி நாளை 5.5.2024 அன்று மாலைக்குள் நிறைவு பெறும். புதிய திறன் மின்மாற்றி அமைத்து சீரான மின்சாரம் நாளை(5.5.2024) மாலை முதல் வழங்கப்படும் என பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *