ஜெயராஜ் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் முதுகலைக் கணினித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட 10 நாள் கோடைகால இலவச கணினிப் பயிற்சி. 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு நிறைவு செய்துள்ள பெண் குழந்தைகளுக்காக ஏப்ரல் 22 முதல் 30 வரை நடத்தப்பட்ட இப்பயிற்சியில் பெரியகுளம் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் 93 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள்.

ஏப்ரல் 22ஆம் நாள் நடைபெற்ற துவக்கவிழாவில் கல்லூரி அருட்சகோதரி முதல்வர் முனைவர் சேசுராணி சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்த அவர் கிராமப்புற மாணவிகளுக்கான இத்தகு முனைதல் பயிற்சிகளை வழங்கிட காலத்தின் கட்டாயம் என்றும் கணினி அறிமுகம் இல்லா மாணவிகளும் கல்லூரிக்கு வந்து செல்லும்போது உயர்கல்வி பயிலவேண்டும்
என்ற ஆர்வம் அவர்களிடையே உருவாகும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வந்த Basics of Computer & MS Office, Inside Computer, Creating Effective Animation using Ms-PowerPoint, Animation using Flash, Video Editing using Clip Champ. Flex Designing using Poster my wall மற்றும் Web development using WordPress ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்லூரியின் பல ஆய்வகங்கள் வரவலாற்றுத்துறையின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்தனை பார்வையிடும் வாய்ப்புகள் இம்மாணவிகளுக்கு அளிக்கப்பட்டன.

நிறைவுவிழாவிற்கு தேனி பாரத் அரிமா சங்க சார்ட்டர்டு தலைவர் மற்றும் தமிழ்நாடு தேசிய முன்னாள் படைவீரர் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டல தலைவர் அரிமா வி. மகாராஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். தேனி அரசு பள்ளிக் கூட்டமைப்பின் தலைவர் முருகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

பயிற்சியினை திறம்பட நிறைவு செய்த மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சேசுராணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துறைப் பேராசிரியர் ராணி அனைவருக்கும் நன்றிகூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *