தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது
மாநில செயற்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராஜமாணிக்கம்,முத்து, மாநில செயலாளர் பழனிச்சாமி,சையதுயூசுப்ஜான்,மகாதேவன்,
ஹரிபாலகிருஷ்ணன்,செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சாலைப்பணியாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் சிங்கராயன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் க.நீதிராஜா மாநில செயற்குழுவை வாழ்த்தி பேசினார்.


கடந்த கால நடவடிக்கை மற்றும் எதிர்கால இயக்க நடவடிக்கைகள் திட்டமிடல் குறித்து அறிக்கையினை முன்வைத்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் பேசினார்.
மாநில செயற்குழுவின் நிறைவாக சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.

இம்மாநில செயற்குழுவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது
தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவினை கைவிட வேண்டும்,

நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு அழகில் பராமரிக்கப்பட்டு மற்றும் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சாலைகளில் மாநில நெடுஞ்சாலைகள் 12291கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும் இம்மாநில நெடுஞ்சாலையை பராமரிக்க 8 கிலோமீட்டருக்கு 2 சாலைப்பணியாளர்கள் வீதம் 3072 சாலைப் பணியாளர்கள் 307 சாலை ஆய்வாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டால் மேற் சொன்ன3500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அச்சுங்க சாவடிகளில் தனியார் ஒப்பந்ததாரர்கள் சுங்கவரி வசூல் வேட்டை நடத்தக்கூடிய அளவுக்கான வழி வகைகள் ஏற்படுத்தக்கூடிய நிலைமை என்பதும் உள்ளது,

அவ்வாறு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டால் சுங்கவரி வசூல் மூலம் தனியார் முதலாளிகள் பெரும் லாபம் மற்றும் கொள்ளையடிப்ப
தற்கு வழிவகை செய்யும். இதனால் மக்கள் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கும் ஊதியத்தில் ஒரு பகுதி சுங்கவரி செலுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படக்கூடிய நிலைமை என்பது உள்ளது.


நெடுஞ்சாலை துறை சீரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். சாலை பணியாளர்கள் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலகம் சார்ந்த பணியிடங் களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து எதிர்வரும் காலத்தில் நிரந்தர பணியாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கவும் காலமுறை ஊதிய முறையில் ஆள் எடுக்கக்கூடிய நடைமுறையை கைவிடும் வகையிலும் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பு பணிகள் முன்னெடுப்பதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அறியவருகிறோம்.


மேற்சொன்ன சீரமைப்பு கொள்கையின் காரணமாக நெடுஞ்சாலைத்துறை நிரந்தர ஊழியர்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுஞ்சாலை துறையில் பணியிடங்கள் ஒவ்வொன்றாக குறைகிற பொழுது பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த நடைமுறையில் அவுட்சோர்சிங் முறையில் ,தொகுப்பூதிய முறையில், தனியார் ஏஜென்சிகள் மூலமாக அப்பணியிடங்களை முன்னெடுக்க கூடிய நிலைமை உள்ளது மேலும் துறையில் 60 வருடம் பணி முடித்து ஓய்வு பெறக்கூடிய ஊழியர்களை மீண்டும் அப்பணியிடங்களில் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தும் நிலைமையும் உருவாகும் என்ற சூழல் நிலவி வருகிறது.


மேற்சொன்னவற்றை தமிழக அரசு கருத்தில் கொண்டு தற்போது உள்ள நெடுஞ்சாலை துறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் மேலும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட தமிழக அரசு முன்வர வேண்டும் என இம்மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக்
கொள்கிறோம்.


ஏற்கனவே பல்வேறு நிலைமைகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுடைய பணி நீக்க காலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சாலைப் பணியாளர் களின் 41-மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்,
அடிப்படை விதிகள்,அரசின் சட்ட நடைமுறைகளும் முன்னெடுக்கப்படுவதற்கு மாறாக சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படும் முதன்மை இயக்குனர் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,


சாலை பணியாளர்களின் முதுநிலை பட்டியலை தமிழ்நாடு சார்நிலை பணியமைப்புச் சட்டம் SEC:- 41 (1)of TNGS (CS) Act 2016 ன் படி முறைப்படுத்தி அனைத்து கோட்டப் பொறியாளர்கள் ஆணை வெளியிட வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியருக்குறிய ஊதிய மாற்றம் ரூ 5200,ரூ 20’200- தர ஊதியம் ரூ1,900- வழங்கப்பட வேண்டும் தொழில்நுட்ப கூறுகளை உள்ளடக்கி மேற்கொள்ள வேண்டிய சாலை பராமரிப்பு பணியின் பல்வேறு பணிக் கூறுகளை உள்ளடக்கிய பணிக் கடமையை மேற்கொண்டு வரும் சாலை பணியாளர் கள் அனைவருக்கும் விதித்தளர்வு செய்து தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் வழங்க வேண்டும்


என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது அதன் அடிப்படையில்
ஜூன் 10ம் தேதிக்குள் அனைத்து கோட்ட அளவில் சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டங்களை நடத்திடுவது,ஜூன் 10 ம் தேதி அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகம் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது,
ஜூன் 19 ம் தேதி அனைத்து கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தண்டோரா முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *