திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஜாதி ஆதிக்க மனோபாவம் கொண்ட சக மாணவர்களால் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான

மாணவன் சின்னத்துரை 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தபோது மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சனையில் சின்னத்துரை வீடு புகுந்து சக மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர்

இதில் படுகாயம் அடைந்த சின்னத்துறை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில் தமிழக அரசு அவருக்கு என் ஜி ஓ காலனி திருமால் நகரில் புதிதாக வீடு வழங்கி சின்னத்துரையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர் இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொது பொதுத் தேர்வை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் வழியில் எழுதினார்

இந்நிலையில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று வெளிவந்த நிலையில் மாணவர் சின்னத்துரை

தமிழ் – 71
ஆங்கிலம் – 93
பொருளாதாரம் – 42 வணிகவியல் – 84 கணக்குப்பதிவியல்- 85 கணிப்பொறி பயன்பாடு – 94

மொத்தம் – 469

கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை நீண்ட நாள் சிகிச்சை பெற்ற நிலையில் காலாண்டு தேர்வு மருத்துவமனையிலேயே எழுதியது குறிப்பிடத்தக்கது

பேட்டி மாணவன் சின்னத்துரை கூறும்போது ஜாதி ரீதியான பிரச்சனையில் என் மீது சக மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் இதனால் நான் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டேன் படுகாயம் அடைந்த நான் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில்ஐ அனுமதிக்கப்பட்டு அந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனது படிப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது

அதே போல மேல் படிப்பிற்கும் அனைத்து உதவிகளும் தமிழக அரசு மேற்கொள்ளும் என அரசு தெரிவித்திருந்தது தற்போது 12ஆம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்றுள்ளேன் எனக்கு ஆடிட்டர் ஆகுவது எனது எண்ணம் அதற்கு ஏற்ப நான் பிகாம் சிஏ பாடம் எடுத்து எனது படிப்பை படித்து நான் கண்டிப்பாக ஆடிட்டர் ஆக வருவேன் என அவர் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *