திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டக் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில், கூட்டணியின் கிளைச் செயலாளர் செந்தில்குமார் ,பொருளாளர் சரவணன், மகளிர் அணி செயலாளர் காந்திமதி, ஆகியோர் முன்னிலை வகித்து 50க்கும் மேற்பட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்,

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சி டி குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி ,மற்றும் அறிவியல் ஆசிரியை சித்ரா, ஆகியோர் பட்டியல் இன மாணவிகளை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்,

இவர்களின் பணி நீக்கத்திற்கு காரணமான வீடியோ உண்மைக்கு புறம்பான செய்தியை மூன்று மாதங்களுக்கு முன்பே உள்நோக்கத்துடன் பதிவு செய்து தற்போது தலைமை ஆசிரியை பணி ஓய்வு பெற சில நாட்கள் உள்ள நிலையில் பணம் பெரும் நோக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்,


பட்டியல் இன ஆதரவு அமைப்பு ஒன்று அதன் மாநில பொறுப்பாளரின் மகள் தனது வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களது பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் அந்த வீடியோவை பதிவு செய்து மூன்று மாத காலத்திற்குப் பின் உள்நோக்கத்துடன் வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார் ,

வீடியோவில் கூறப்பட்ட புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரோ, அல்லது குறிப்பிட்ட பட்டியலினும் சார்ந்த அரசியல் அமைப்போ, பள்ளியின் தலைமை ஆசிரியரிடமோ, அல்லது மற்ற ஆசிரியர்களிடமோ எந்தவித புகாரையும் தெரிவிக்கவில்லை


ஆரம்ப கட்டத்தில் இரு ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தினர், பின்னர் தலைமையாசிரியர் பட்டியலினத்தைச் சார்ந்தவர் என தெரிய வந்த பிறகு அவரை மட்டும் விடுவித்து தற்போது அறிவியல் ஆசிரியை மீது குறி வைத்து மீண்டும் ஊடகங்கள் சமூக வலைதளங்களில் புகார்களை பதிவிட்டு வருகின்றனர்,

மேலும் இச்செய்திகள் அனைத்தும் பொய்யானது என்று பல்வேறு அமைப்புகளின் விசாரணையிலும் தெரியவந்துள்ளது, மேலும் அவர்கள் கையூட்டு பெரும் நோக்கத்துடன் தலைமை ஆசிரியை அவர்களது உறவினர்களிடம் நடத்திய உரையாடலின் ஆடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் ,

எனவே மேற்கண்ட ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் என அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது இந்த கோரிக்கை முடிவின் நகல்களை திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோர்களுக்கு அனுப்பி உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *